Advertisment

பன்னுன் கொலை சதி வழக்கு: 'அமெரிக்க சிறையில் உள்ள என்னை இந்திய தூதரகத்தில் இருந்து இதுவரை யாரும் சந்திக்க வில்லை': நிகில் குப்தா

நிகில் குப்தா தற்போது நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pannun us

அமெரிக்க குடிமகனும், சீக்கிய பிரிவினைவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னூனை, பணம் பெற்று கொலை செய்ய சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தாவை அமெரிக்க நீதித்துறை கைது செய்தது.  செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்ட அவர் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார். 

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய நிகில் குப்தா, அமெரிக்க சிறைக்கு மாற்றப்பட்டு 7 மாதங்கள் ஆகும் நிலையில், இந்திய அரசாங்கத்திலிருந்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. என் குடும்பத்தினர் பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

"நான் ப்ராக் நகரிலிருந்து (ஜூன் 14 அன்று) அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதிலிருந்து, நான் தூதரக அணுகலைப் பெறவில்லை. இந்திய தூதரகத்திலிருந்து யாரும் என்னை சந்திக்கவில்லை. எனது குடும்பத்தினர் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தனர்; இருப்பினும், இன்றுவரை யாரும் என்னைச் சந்திக்கவில்லை,” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு தெரிவித்தார்.

குப்தா, தற்போது நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.  குப்தா, அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த ஒருவர் மூலம் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Advertisment
Advertisement

குப்தா ப்ராக் நகரில் ஏறக்குறைய ஒரு வருட காவலில் இருந்தபோது, ​​மூன்று முறை இந்திய தூதரக அதிகாரிகள் தன்னை சந்தித்ததாக கூறினார்.

2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குப்தாவின் குடும்பம் இவ்விவகாரத்தில் தலையிடக் கோரி இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இது ஒரு "சென்சிடிவ் " விவகாரம் என்றும், "அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியது.

அவரது குடும்பத்தினர், வெளியுறவு துறையில் உள்ள அதிகாரிகளுக்கு மின்னஞ்சல்களை எழுதியுள்ளனர், ஆனால் யாரையும் சந்திக்க முடியவில்லை என்று குப்தா கூறினார்.

53 வயதான குப்தா, விகாஷ் யாதவ் உடனான தொடர்பை மறுத்தார். விகாஷ் யாதவ் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர். மேலும் அமெரிக்கா வழங்கிய ஆதாரங்களை "புனையப்பட்டது" என்று கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, யாதவ், ஆரம்பத்தில் "இந்திய அதிகாரி" என்று மட்டுமே அடையாளம் காணப்பட்டார், அமெரிக்க அரசு வழக்கறிஞரால் பெயரிடப்பட்டது. இருப்பினும், குப்தாவைப் போலல்லாமல், யாதவ் இந்தியாவில் இருக்கிறார், இந்த செய்தித்தாள் முதலில் அறிவித்தபடி, தற்போது டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

“விகாஸ் என்பது மிகவும் பொதுவான பெயர் மற்றும் யாதவ் என்பது இந்தியாவில் ஒரு பெரிய சமூகம். அந்த பெயரையோ அல்லது இந்த விஷயத்துடன் தொடர்புடையவர்களையோ எனக்குத் தெரியாது. நான் இந்தப் பெயரைப் படித்தது ஒரே ஒரு முறைதான்... (நவம்பர் 2024ல் வெளியிடப்பட்டது)" என்று குப்தா  ​​​​அந்த பெயரில் யாரையாவது அறிந்திருக்கிறீர்களா என்று கேட்டபோது கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க:   Pannun assassination plot: In US jail, Nikhil Gupta says no visit from embassy in seven months

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment