Advertisment

பாரடைஸ் பேப்பர்ஸ்: தொலைபேசி ஒட்டுக்கேட்பிற்கு பிறகு, வெளிநாடுகளில் இரு நிறுவனங்கள் தொடங்கிய நீரா ராடியா!

காங்கிரஸ் ஆட்சியின் போது, மால்டாவில் உள்ள இரு நிறுவனங்களில் நீரா ராடியா அங்கம் வகித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரடைஸ் பேப்பர்ஸ், நீரா ராடியா, பாரடைஸ் பேப்பர்ஸ் இந்தியா

பாரடைஸ் பேப்பர்ஸ், நீரா ராடியா, பாரடைஸ் பேப்பர்ஸ் இந்தியா

2010-ஆம் ஆண்டு கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட போது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு 'ராடியா டேப்ஸ்' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் அரசு ஆட்சியின் போது, சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தனக்கு இருந்த நெருக்கத்தை பயனபடுத்தி, மந்திரி சபையை அமைப்பதில் தலையீடு செய்தார் நீரா ராடியா. இப்போது, மால்டாவில் உள்ள இரு நிறுவனங்களில் நீரா ராடியா அங்கம் வகித்திருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisment

2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மால்டா நாட்டில் சூஸ் லா வேலட் லிமிட்டட் (Suez La Vallette Limited) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில், நீரா ராடியா இயக்குனராகவும், சட்டம் மற்றும் நீதித்துறை பிரதிநிதியாகவும் செயல்பட்டிருக்கிறார். மேலும், மால்டாவில் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெகாசஸ் சர்வதேச ஆலோசகர்கள் லிமிட்டட் (Pegasus International Advisors Limited) என்ற நிறுவனத்திலும் நீரா ராடியா பதவி வகித்திருக்கிறார். இவையனைத்தும், பதிவு செய்யப்பட்ட மால்டா ஆவணங்களைக் கொண்டு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய புலனாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இதன் பின்னர், ஆகஸ்ட் 2014-ஆம் ஆண்டு சூஸ் லா வேலட் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து ராடியா நீக்கப்பட்டிருக்கிறார். அதற்கு முன்னதாக, ஃபிப்ரவரி 2014-ஆம் ஆண்டு பெகாசஸ் நிறுவனத்தில் இருந்து ராடியா தானாகவே பதவி விலகியிருக்கிறார்.

இதன்பின், ஆவணங்களை நாம் சரிபார்த்த போது, இவ்விரு நிறுவனங்களும், தங்களது பெயர்களை மாற்றி மாற்றி இயங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

https://www.youtube.com/embed/VTps5s_JLhQ

பெகாசஸ் நிறுவனம், 2014-ஆம் ஆண்டு எஸ்எல்வி எஃப்ஜி டெக்னோபோலோ லிமிட்டட்(SLV FG Technopolo Limited) என்ற பெயரில் தனது பெயரை மாற்றி பதிவு செய்துள்ளதை, கசிந்துள்ள 'ஆப்பிள்பை' ஆவணங்கள் நமக்கு உறுதி செய்கிறது. பெகாசஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சூஸ் லா வேலட் லிமிட்டட் நிறுவனம் தனது பெயரை, 2015 நவம்பர் மாதம் சூஸ் ஹோல்டிங் லிமிட்டட் (Suez Holdings Limited) என்ற பெயரில் மாற்றிக் கொண்டதை நாம் காண முடிகிறது.

மால்டாவில் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில், பெகாசஸ் நிறுவனத்தின் 'பொருளடக்கம்' பற்றிய விவரத்தை நாம் கண்டறிந்தோம். அதில், "வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவது மற்றும் அவற்றின் வணிகங்களின் மேம்பாடு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவுவது போன்ற பணிகள் செய்வதே தங்களது நோக்கம்" என பெகாசஸ் நிறுவனத்தின் 'பொருளடக்கம்' பகுதியில் நாம் காண முடிகிறது.

publive-image

சூஸ் லா வேலட் லிமிட்டட் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில், "ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தீவிரமாக ஈடுபடும் ஒரு மால்டிஸ் ஹோல்டிங் கம்பெனி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், மார்ச் 2014-ஆம் ஆண்டு, கம்பெனி சட்டத்தின் விதிமீறல் குற்றச்சாட்டுக்காக ராடியாவின் வைஷ்ணவி குழும நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக "தீவிரமான மோசடி புலனாய்வு அலுவலகம்" (SFIO -Serious Fraud Investigation Office ) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நீரா ராடியா செய்தித் தொடர்பாளரை நாம் தொடர்பு கொண்ட போது, "தகவல் தொடர்பு வியாபாரங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து, மிஸ் நீரா ராடியா, மால்டா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கம்பெனியான பெகாசஸ் நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். BRICS நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் பிற பொருளாதாரங்களில் பரவிக் கிடந்த நெட்வொர்க்குடன் வளர்ந்துவரும் ஒரு சந்தை வல்லுனராக தன்னை வளர்த்துக் கொள்ள அவரது முயற்சியின் ஒரு பகுதியாகவே இது இருந்தது.

publive-image

இருப்பினும், உடல்நிலை உள்ளிட்ட சில தனிப்பட்ட காரணங்களால் மிஸ் ராடியாவால் அந்நிறுவனத்தில் அங்கம் வகிக்க முடியவில்லை. இதனால், இயக்குனர் பதவியில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு அவர் விலகிக் கொண்டார். அந்த நிறுவனத்தில் பணியாற்றியது வரை, நீரா ராடியா சம்பளமோ அல்லது மற்ற பொருட்களோ பெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சூஸ் லா வேலட் நிறுவனத்திற்கும், மிஸ் ராடியாவுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை" என்று நீரா ராடியா செய்தித் தொடர்பாளர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பனாமா பேப்பர்ஸ் கசிவின் போதும், 1994-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 'க்ரோன்மார்ட் இண்டர்நேஷனல் க்ரூப்' என்ற வெளிநாட்டு கம்பெனியை தொடங்கியதாக நீரா ராடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அன்பரசன் ஞானமணி

Paradise Papers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment