Advertisment

பாரடைஸ் பேப்பர்ஸ்: வீரப்ப மொய்லி அமைச்சராக இருந்தபோது, மகன் நிறுவனத்தில் வெளிநாடு நிறுவனங்கள் முதலீடு!

வீரப்ப மொய்லி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ஹர்ஷா மொய்லி, யுனைட்டஸ் குழுமத்தின் துணை நிறுவனங்களிலிருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரடைஸ் பேப்பர்ஸ், Paradise papers, வீரப்ப மொய்லி

பாரடைஸ் பேப்பர்ஸ், Paradise papers, வீரப்ப மொய்லி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி மத்திய அமைச்சராக இருந்தார். அவரது மகன் ஹர்ஷா மொய்லி, யுனைட்டஸ் குழுமத்தின் துணை நிறுவனங்களிலிருந்து முதலீடுகளைப் பெற்று, மைக்ரோஃபைனான்சை ஊக்குவிக்க நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். யுனைட்டஸ் லாப், யுனைட்டஸ் ஈக்குவிட்டி ஃபண்ட், யுனைட்டஸ் கேபிடல், யுனைட்டஸ் சிட் ஃபண்ட் மற்றும் யுனைட்டஸ் இம்பேக்ட் ஆகிய பல துணை முதலீடு நிறுவனங்களை யுனைட்ட்ஸ் க்ரூப் கொண்டிருந்தது. அமெரிக்காவின் சீட்டெல் மற்றும் பெங்களூருவில் இவை பதிவு செய்யப்பட்டு இருந்தன.

Advertisment

மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த யுனைட்டஸ் இம்பேக்ட் பிசிசி(PCC) நிறுவனம், ஃபிப்ரவரி 2012-ஆம் ஆண்டு ஆப்பிள் பை நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுவிடட்டதாக 'பாரடைஸ் பேப்பர்ஸ்' மூலம் வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரே ஒரு பங்குதாரராக, யுனைட்டஸ் இம்பேக்ட் பார்ட்னர்ஸ் LLC இருந்துள்ளது.

https://www.youtube.com/embed/A4IN8NZEEe8

யுனைட்டஸ் இம்பேக்ட் பிசிசி-யில் இரண்டு கிளைகள் உள்ளன. முதலாவது, 2014 வரை இயங்கிய கினாரா யுனைட்டஸ் இம்பேக்ட் பார்ட்னர்ஸ் - இந்த கிளை தனது பரிவர்த்தனையை செய்யத் தொடங்கவில்லை. அதன் பங்குகள் சந்தாவில் இல்லை. மற்றொன்று MYA யுனைட்டஸ் இம்பேக்ட் பார்ட்னர்ஸ் - இது ஹர்ஷா மொய்லியின் நிறுவனத்திலும், மொக்ஷா- யுக் அக்சஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்திலும் முதலீடு செய்தது.

மார்ச் 2012-ஆம் ஆண்டு "கிளைன்ட் ஸ்க்ரீனிங் செக்' செய்த ஆப்பிள்பை நிறுவனம், ஹர்ஷா மொய்லி அரசியல் வெளிப்பாடு மிக்க மனிதர் (PEP - Politically Exposed Person) என்று குறிப்பிட்டுள்ளது. அதுவும், அவரது தந்தை பதவியில் இருந்த போதே இவ்வாறு குறிப்பிட்டு இருந்தது.

ஆப்பிள்பை தகவலில், ஹர்ஷா மொய்லி (2012-ல்) மொக்ஷா- யுக் அக்சஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 37.24% பங்குகளை(31.97 லட்சம்) தன்வசம் கொண்டிருந்தார். மொரீஷியஸ் யுனைட்டஸ் கார்ப்பரேஷன் 26.33% பங்குகளை(22.61 லட்சம்) தன்வசம் கொண்டிருந்தது. வினோத் கோஸ்லா 17.37% பங்கினையும் (14.92 லட்சம்) மற்றும் MYA பணியாளர் பங்கு அறக்கட்டளை 7.29% பங்கினையும் (6.26 லட்சம்) தன்வசம் வைத்திருந்தது.

ஹர்ஷா மொய்லி தவிர, நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக யுனைட்டஸ் ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனம் உள்ளது. யுனைட்டஸ் இன்க் உடன் இணைந்த ஒரு பங்கு நிதியாக இது உள்ளது. இரண்டாவதாக, வினோத் கோஸ்லா, மார்க் ஸ்ட்ராப் மற்றும் யுனைட்டஸ் இம்பேக்ட் ஆகியோர் நிறுவிய கோஸ்லா இம்பேக்ட் ஃபண்ட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், ஏழை மக்களுக்காக இயங்கும் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்கிறது.

இன்று கசிந்துள்ள ஆப்பிள்பை தகவலில், மொக்ஷா- யுக் அக்சஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் பின்னணி இதுதான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கிராமப்புற நலத் திட்டங்களில் ஈடுபடும் தொழிலை இந்நிறுவனம் செய்து வந்துள்ளது. இது கிராமிய உற்பத்தியாளர்களின் அடித்தளத்தை ஒழுங்குபடுத்துதல், கிராமப்புறங்களில் கொள்முதல் அமைப்பை நிறுவுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றது.

MYA யுனைட்டஸ் இம்பேக்ட் பார்ட்னர்ஸ், ஏன் ஒரேயொரு பங்குதாரரை கொண்டிருந்தது என்ற ரகசியத்தை ஆப்பிள்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. UIP MYA LLAC - தான் அந்த பங்குதாரர். இந்நிறுவனம், யுனைட்டஸ் இம்பேக்ட் PCC-யுடன் மார்ச் 2012-ல் ஒரு பங்கு சந்தா ஒப்பந்தம் போட்டது. 2014 ஆம் ஆண்டின் இணக்க அறிக்கையின்படி "2012 மார்ச் 15 தேதியிட்ட பங்கு சந்தா உடன்படிக்கை Unitus Impact PCC மற்றும் UIP MYA LLC இடையே எப்படி ஏற்பட்டது"என குறிப்பிட்டுள்ளது. இதுவரை, இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியது குறித்த பதில் இல்லை.

மேலும், "பயனீட்டாளர் BO (beneficicary owner) சரிபார்ப்பு மற்றும் நிதிப் படிவத்தின் மூல அறிவிப்பு UIP MYA LLC நிறுவனத்திற்காக உறுதி செய்யப்படவில்லை" மற்றும் முதலீடுகளின் ஆதாரம் குறித்த தகவலும் கிடைக்கவில்லை.

இருப்பினும், மொக்ஷா-யுக் அக்சஸ் நிறுவனம் ஏன் மொய்லி நிறுவனத்துடன் இணைந்துள்ளது? இதன்மூலம், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், அனைத்து நிறுவனங்களும் யுனைட்டஸ் இம்பேக்ட் பிசிசி-யுடன் இணைந்து MYA என்ற பெயரில் செயல்பட்டிருக்கிறது. ஆப்பிள்பை ஆவணங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, யுனைட்டட் பிசிசி ஒரு எழுத்துப்பூர்வமான பதிலையும், மொக்ஷா யுக் அக்சஸ் நிறுவனத்தில், மார்ச் 15, 2012-ஆம் ஆண்டு முதலீடு செய்ததற்கான தேவையையும் குறிப்பிட்டுள்ளது. யுனைட்டஸ் இம்பேக்ட் MYA LLC மூலம், 736,270 டாலருக்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது.

UIP MYA LLC-ல் 14 பங்குதாரர்கள் இருந்தனர். ஜூலை 2014 இணக்க அறிக்கையின் படி, பங்குதாரர்களின் சதவீத பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பெயரிடப்படாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருந்தனர். மேலும், இந்தியாவில் பணம் முதலீடு செய்யப்பட வேண்டும் என ஆவணங்கள் தெரிவித்தாலும், யுனைட்டட் இம்பாக்ட் பிசிசி நிறுவனம் இந்தியாவில் இருந்து தரப்படும் நிதிகளை பயன்படுத்தாது என்று இணக்க அறிக்கை கூறியுள்ளது.

ஹர்ஷா மொய்லியின் பதில்

MYA நிறுவனத்தை தொடங்கிய பின், அதன் சிஇஓ-வாக 2005 முதல் உள்ளேன். எவ்வளவு தான் கடுமையான சவால்கள் இருந்தாலும், கிராமப்புற இந்தியாவில்,MYA நிறுவனம் பெற்ற வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். பால் / வேளாண் போன்றவை, கிராமப்புற இந்தியாவின் ஒரு முக்கிய துறை ஆகும். இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்.

MYA எப்பொழுதும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. நமது பால் உற்பத்தியாளர்கள், உற்பத்தி அடிப்படையில் உலகில் மிகச் சிறப்பாக செயல்பட வைப்பதையும், மனித முன்னேற்றத்திற்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியை எட்டுவதுமே, எப்போதும் எங்களது குறிக்கோளாக உள்ளது. இதற்காக, நாம் வெளிநாட்டு முதலீடுகளை கோரிய போது, யுனைட்டஸ் இம்பேக்ட் பிசிசி - MYA UIP ஆகியவை MYA நிறுவனத்தில் முதலீடு செய்தன.

யுனைட்டஸ் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் கோஸ்லா இம்பேக்ட் போன்ற மற்ற தொழில் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்தும், நாம் மூலதனத்தை உயர்த்தியுள்ளதையும் நீங்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ள வேண்டும். என் தந்தை அமைச்சராவதற்கு முன்பே, இந்த நிறுவனங்கள் மூலம் நிதிப் பெற்று MYA நிறுவனம் செயல்படத் தொடங்கிவிட்டது.

MYA-ல் முதலீடு செய்துள்ள அனைத்து முதலீட்டாளர்கள், மற்றும் என்னுடைய சொந்த பங்குகள் குறித்த தகவல்கள், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பொதுத் தளங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களும் நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் சரிபார்க்கப்பட்டிருக்கிறது.

பெறப்பட்ட நிதிகள் அனைத்தும், MYA-ஆல் பால் தொழில் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் முக்கியமான விஷயம் என்னவெனில், அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இவையனைத்தும் செய்யப்பட்டன. வருடாந்திர செலவுகள் மற்றும் வரவுகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இவை கூட, அனைவரும் அறியக் கூடிய வகையில் பொதுத் தளங்களில் வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட குறிப்பு. என் தந்தை ஒரு முக்கிய அரசியல்வாதி, நேர்மையானவர். நான் எப்போதும் பெருமையடைந்த ஒரு மனிதர். இதனால், நான் ஒரு அரசியல் வெளிப்பாடு மிக்க மனிதன் (PEP - Politically Exposed Person) என்று பெயர் பெற்றுள்ளதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும், MYA நிறுவன விவகாரங்களில் என் தந்தை தலையிடுவதேயில்லை. எங்கள் நிறுவனம் மிகவும் வெளிப்படையானது. ஆஃப்ஷோர் நிறுவனங்களுக்கும், MYA-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இவ்வாறு ஹர்ஷா மொய்லி தெரிவித்துள்ளார்.

தமிழில் அன்பரசன் ஞானமணி

Paradise Papers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment