Advertisment

காதல் திருமணத்தில் பெற்றோர் சம்மதம்: சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - குஜராத் முதல்வர்

காதல் திருமணங்களில் பெற்றோர் சம்மதத்தை கட்டமாயக்க வேண்டும்; கோரிக்கை விடுத்த பா.ஜ.க – காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்; ஆய்வு செய்வதாக குஜராத் முதல்வர் உறுதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bhupendra patel

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் (கோப்பு படம்)

“அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள்” காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதத்தை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள நுகர் கிராமத்தில் மாணவர்களை கௌரவிக்கும் படிதார் சமூக நிகழ்வில் முதல்வர் பூபேந்திர படேல் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். “(இங்கு) வரும்போது, ​​(மாநில சுகாதார அமைச்சர்) ரஷிகேஷ்பாய் படேல் என்னிடம் சிறுமிகள் ஓடிப்போகும் வழக்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், எல்லாவற்றிலிருந்தும் (அம்சங்கள்) ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்... எனவே அதில் (காதல் திருமணங்கள்) பெற்றோரின் சம்மதம் இருப்பதை உறுதி செய்ய ஏதாவது செய்ய முடியும் என்றும் சொன்னார்” என்று முதல்வர் கூறினார்.

இதையும் படியுங்கள்: மணிப்பூர் பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உள்துறை தெரிவிப்பு

“அரசியலமைப்புச் சட்டம் தடையாக அமையாவிட்டால், அதற்கான ஆய்வை மேற்கொள்வோம். மேலும் அதில் நல்ல பலன்களை அடைய நாங்கள் ஒரு முயற்சியை மேற்கொள்வோம்,” என்று முதல்வர் பூபேந்திர படேல் கூறினார்.

2015 ஆம் ஆண்டு சமூகத்தின் ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய படிதார் குழுவான சர்தார் படேல் குழு (SPG) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. இதில் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் பல படிதார் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

முதல்வரின் அறிவிப்பு அகமதாபாத்தின் ஜமால்பூர்-காடியா தொகுதியின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெடவாலாவின் பாராட்டுகளைப் பெற்றது, அவர் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக திங்களன்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். "இது ஒரு இந்து-முஸ்லீம் பிரச்சினை அல்ல, ஆனால் இரண்டு குடும்பங்களைப் பற்றியது" என்று இம்ரான் கெடவாலா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

“பெண்ணின் குடும்பம் உடைந்து போகிறது, அவள் வீட்டை விட்டு ஓடும்போது சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் குடும்பம் தவிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள், எனவே அவர்களின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுபோன்ற பல வழக்குகள் என்னிடம் கொண்டு வரப்பட்டுள்ளன, அங்கு பெண்கள் தங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக ஓடிவிட்டனர், பின்னர் அந்தப் பெண்கள் வருந்தினர்,” என்று இம்ரான் கெடவாலா கூறினார்.

வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பான மசோதாவை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்த இம்ரான் கெடவாலா, மசோதாவுக்கு தனது ஆதரவு உண்டு என்றும் கூறினார். மேலும், "இந்த மசோதாவைக் கொண்டுவருவது முக்கியம், ஏனென்றால் குழந்தைகள் இன்று பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் பிறர் பேச்சை கேட்காத கடின இதயம் கொண்டவர்களாக மாறிவிட்டனர்,'' என்றும் இம்ரான் கெடவாலா கூறினார்.

இம்ரான் கெடவாலாவின் கட்சி சகாவும் எம்.எல்.ஏ.,வுமான ஜெனிபென் தாக்கூர், மாநிலத்தின் திருமணச் சட்டத்தில் பெற்றோரின் சம்மதம் வேண்டும் என்று திருத்தம் செய்ய வேண்டும் என்ற பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஃபதேசின் சவுகானின் கோரிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்த நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்வரின் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வந்தது.

பெண் வசிக்கும் அதே தாலுகாவில், உள்ளூர் சாட்சிகள் முன்னிலையிலும், பெற்றோரின் ஒப்புதலுடனும் காதல் திருமணங்களை பதிவு செய்ய, குஜராத் திருமண பதிவுச் சட்டம், 2009-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Gujarat Marraige
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment