Advertisment

பாராளுமன்ற பாதுகாப்பு மீறல்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்தனர்; குடும்பத்தினர் தகவல்

வேலை கிடைக்காத விரக்தியில் இருந்தனர்; விவேகானந்தர், பகத் சிங்கால் ஈர்க்கப்பட்டவர்கள்; பாராளுமன்ற வண்ண புகை வீச்சு சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் பற்றி குடும்பத்தினர் கூறும் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
parliament intruders

(இடமிருந்து) சாகர் சர்மா, மனோரஞ்சன் டி, நீலம் ஆசாத் மற்றும் அமோல் ஷிண்டே; நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நால்வர்

Kiran Parashar , Sukhbir Siwach , Atikh Rashid , Manish Sahu

Advertisment

பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் குறைந்தது மூன்று பேர் வேலையில்லாமல் உள்ளனர், வேலை கிடைக்காததால் அவர்கள் விரக்தியடைந்து இருந்தனர் என்று இரண்டு பேரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் படிக்க: Parliament security breach: They were frustrated over not getting jobs, say families of accused

மைசூருவில் வசிக்கும் மனோரஞ்சன் டி (33), பொறியியல் பட்டதாரி, ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்தவர், இப்போது தனது தந்தைக்கு விவசாயத்தில் உதவி செய்து வந்தார். லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே (25) ராணுவ ஆட்சேர்ப்பில் தோல்வியடைந்தவர்; மற்றும் ஜின்ட் பகுதியைச் சேர்ந்த நீலம் ஆசாத் (37) பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் தோல்வியடைந்தவர். நான்காவதாக, லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா (25) என்பவர் இ-ரிக்ஷாவை ஓட்டி வருபவர்.

"நாங்கள் ஒரு வளமான குடும்பம் அல்ல, ஆனாலும் நாங்கள் அவளுக்கு கல்வி கற்பித்தோம். வீட்டில், அடிக்கடி ‘நான் தேவையில்லாமல் அதிகம் படித்துள்ளேன், ஆனால் வேலை கிடைக்கவில்லை... நான் செத்தால் நன்றாக இருக்கும்என்று சொல்லி வந்தார்,” என்று நீலம் ஆசாத்தின் அம்மா சரஸ்வதி கூறினார்.

எம்.பி.க்கள் சபைக்குள் இருப்பதைக் காணலாம், அங்கு ஒரு நபர் ஒரு குப்பியிலிருந்து மஞ்சள் புகையை வெளியேற்றினார். (புகைப்படம்: எதிர்க்கட்சி எம்.பி.)

பாராளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத், 2020-21 வேளாண் சட்ட எதிர்ப்பு மற்றும் மல்யுத்தப் போராட்டத்திலும் பங்கேற்றார், மேலும் மல்யுத்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் என்று ஜிண்ட் பகுதியில் இருந்து ஒரு பண்ணை தலைவர் சிக்கிம் நைன் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள காசோ குர்த் கிராமத்தைச் சேர்ந்த நீலம் ஆசாத், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார் என்று சிக்கிம் நைன் கூறினார்.

அவரது சகோதரர் ராம் நிவாஸின் கூற்றுப்படி, நீலம் ஆசாத் MA, M.Ed மற்றும் M.Phil பட்டங்களைப் பெற்றுள்ளார் மற்றும் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக, டெல்லியில் வாடகை விடுதியில் தங்கியிருந்தபோது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். அவள் செவ்வாய்கிழமை எங்களிடம் ஹிசார் செல்வதாகச் சொன்னாள். அவள் டெல்லியில் இருப்பது எங்களுக்குத் தெரியாது,” என்று ராம் நிவாஸ் கூறினார்.

நீலம் ஆசாத் கும்ஹர் சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் அவரது தந்தை மிட்டாய் வியாபாரி. அவளுடைய சகோதரர்கள் கிராமத்தில் பால் விற்கிறார்கள்.

மனோரஞ்சனின் தந்தை தேவராஜ் டி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: "அவர் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர் என் மகன் அல்ல. ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், அவர் நல்லவர்... அவர் டெல்லியில் இருப்பது எனக்குத் தெரியாது. அவர் கல்லூரி நாட்களில் மாணவர் தலைவராக இருந்தார், ஆனால் அவருடைய தொடர்புகள் பற்றி எனக்குத் தெரியும். அவரது செயலை நான் கண்டிக்கிறேன்என்று கூறினார்.

சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில், மைசூருவில் உள்ள விஜயநகர் போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று, அவரது மகனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்தனர். மனோரஞ்சன் திருமணமாகாதவர், தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான மனோரஞ்சன், பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், ஆனால் தற்போது பணியில் இல்லை. அவர் அடிக்கடி டெல்லி மற்றும் பெங்களூரு செல்வதாக அவரது தந்தை கூறினார்.

மனோரஞ்சன் நிறைய புத்தகங்களைப் படித்தார், குறிப்பாக சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள். அவருடைய அரசியல் சார்பு எனக்கு தெரியாது. அவர் ஒரு மாணவர் தலைவராக இருந்தார், இன்று வரை அவர் சமூகத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வர விரும்புகிறார்,” என்று தேவராஜ் கூறினார்.

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜாரி கிராமத்தில், நீலம் ஆசாத்துடன் பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்து பிடிபட்ட அமோல் தன்ராஜ் ஷிண்டேவின் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர்.

ராணுவ ஆட்சேர்ப்பில் தேர்ச்சி பெறாததால் அமோல் தன்ராஜ் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "அவர் இதைச் செய்ய என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் முயற்சி செய்த போதிலும், தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் அவர் மனச்சோர்வடைந்தார். 'என்னால் தேர்ச்சி பெற முடியாவிட்டால் எனது கல்வி மற்றும் தயாரிப்பின் பயன் என்ன?' என அடிக்கடி சொல்வார்." என்று அவர் கூறினார்.

தற்போது அக்னிவீர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு வயதாகிவிட்டதால், வேறு வழிகளை தேடி வந்தார். "அவர் கடந்த காலங்களில் பல முறை ஆட்சேர்ப்பு இயக்கங்களில் பங்கேற்றுள்ளார் - ரத்னகிரி, அவுரங்காபாத், நாசிக்," என்று அவரது தந்தை தன்ராஜ் கூறினார்.

அவரது பெற்றோர் விவசாய கூலித்தொழிலாளர்கள் என்று கிராமவாசிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "அவர்கள் நான்கு உடன்பிறப்புகள் மற்றும் அமோல் இளையவர்" என்று ஒரு கிராமவாசி கூறினார்.

புகைப் பெட்டிகள் காலணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. (பட ஆதாரம்: MP Danish Ali/X)

லக்னோவில், சாகரின் குடும்பத்தினர், அவர் போராட்டத்திற்காக டெல்லி செல்வதாக அவர் குறிப்பிட்டதாகக் கூறினார். புதன்கிழமை மாலை, குடும்பத்தினரிடம் போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சாகர் கடந்த காலத்தில் பெங்களூருவில் பணிபுரிந்தார், ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் வாடகைக்கு இ-ரிக்ஷாவை ஓட்டி வந்தார் என்று அவரது 15 வயது சகோதரி கூறினார்.

அடுத்த வீட்டில் வசிக்கும் தச்சரான அவரது மாமா பிரதீப் ஷர்மா, சாகர் டெல்லி செல்லும் ரயிலை தவறவிட்டதாகவும், ஆனால் செவ்வாய்கிழமை காலை அடுத்த ரெயிலில் ஏறியதாகவும் கூறினார். அவரது தாயார் ராணி ஷர்மா அவர்கள் வீட்டில் ஊடகவியலாளர்கள் வந்தபோதுதான் இந்தச் சம்பவம் குறித்து அறிந்தார்.

சாகர், அவரது சகோதரி மற்றும் அவர்களது பெற்றோர் அடங்கிய குடும்பம் முதலில் உன்னாவோ பகுதியைச் சேர்ந்தவர்கள், கடந்த 15 ஆண்டுகளாக லக்னோவில் வாடகைக்கு தங்கி வசித்து வருகின்றனர். அவரது நண்பர் விவேக் ஜெய்ஸ்வால் அவரை சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் ஆதரவாளர் என்று விவரித்தார், மேலும் அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment