Advertisment

மக்களவை சபாநாயகர் தேர்தல்: வரலாற்றில் முதல் முறையாக இருவர் போட்டி; காரணம் என்ன?

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Parliament Speaker Election

காங்கிரஸ் எம்பி கே சுரேஷ் மற்றும் பாஜக எம்பி ஓம் பிர்லா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.க 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால், பா.ஜ.க பீகாரின் நித்தீஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க : Parliament Speaker Election Live Updates: No consensus, Opposition fields K Suresh as Om Birla eyes second term in historic election

இதனைத்த தொடர்ந்து மக்களவை கூட்டத்தொடர் இன்று கூறிய நிலையில், தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யும் தேர்தல் குறித்து பேசப்பட்டது. இதில், மக்களவையில் துணை சபாநாயகர் பதவி இருக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பா.ஜ.க. சார்பில் இந்த கோரிக்கைக்கு எவ்வித உறுதியும் அளிக்கவில்லை.

அதே சமயம், மக்களவை சபாநாயகர் பதவிக்கு என்.டி.ஏ கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓ.பிர்லா நிறுத்தப்பட்டுள்ள நிலையில், துணை சபாநாயகர் பதவி குறித்து உறுதி அளிக்காத காரணத்தினால், எதிர்கட்சிகள் சார்பில், மக்களவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். சபாநாயர்கர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை அனைத்து சபாநாயகர்களும் மக்களவையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தற்போது மக்களவை சபாநாயர் பதவிக்கு பெரும் போட்டி எழுந்துள்ளது. முன்னதாகமக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கூறியிருந்தார். அதே சமயம் மக்களவை துணை சபாநாயர் பதவி கேட்ட எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க எம்.பி பியூஷ் கோயல் கூறுகையில்,  “சபாநாயகர் எந்த கட்சியையும், எதிர்க்கட்சியையும் சேர்ந்தவர் அல்ல; அவர் முழு சபைக்கும் சொந்தமானவர். அதேபோன்று, துணை சபாநாயகரும் எந்த கட்சியையும் அல்லது குழுவையும் சேர்ந்தவர் அல்ல; அவர் முழு சபைக்கும் சொந்தமானவர், எனவே சபையின் ஒப்புதல் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் மட்டுமே துணை சபாநாயகராக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள், லோக்சபாவின் எந்த மரபுக்கும் பொருந்தாதுஎன்று என்று கூறியுள்ளார்.

இதனிடையே சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க எதிர்க்கட்சிகளுடன் பாஜக தலைவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். எனினும், துணை சபாநாயகர் பதவி குறித்து ஆளும் கட்சியிடம் இருந்து எந்த உறுதியான தகவலும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். இதனால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Parliamanet Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment