நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று (செப்.18) தொடங்கி செப்.22 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்கிழமை) முதல் அவை நடவடிக்கைகள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது, மேலும் எட்டு மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக பட்டியலிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமன முறை மற்றும் பணி நிபந்தனைகளை மாற்றும் சர்ச்சைக்குரிய மசோதாவை அரசாங்கம் எடுக்குமா என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) தொடர்பான 2023-ம் ஆண்டு மசோதா, புதன்கிழமை மக்களவை செயலகம் வெளியிட்ட 4 மசோதாக்களில் ஒன்றாகும்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், "இந்திய நாடாளுமன்றத்தின் வளமான பாரம்பரியத்தை நினைவுகூரும் மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றும் விழாவிற்கு" செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உறுப்பினர்கள் ஒன்று கூடுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையர் நியமன மசோதா, ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத்தால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட பட்டியலில் அது இல்லை. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த மசோதாவை கொண்டு வருவது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூட்டத்தில் தெரிவித்ததாக தெரிகிறது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷி கூறியதாவது, "முதல் நாள், பழைய பார்லிமென்ட் மாளிகையில் கூட்டத்தொடர் நடக்கும். மறுநாள், அதாவது செப்டம்பர் 19ம் தேதி, பழைய பார்லிமென்ட் மாளிகையில் போட்டோ செஷன், பிறகு காலை 11 மணிக்கு சென்ட்ரல் ஹாலில் விழா நடக்கும். அதன் பின்னரே புதிய பாராளுமன்றத்திற்குள் நுழைவோம். பாராளுமன்ற அமர்வு செப்டம்பர் 19 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் வழக்கமான பாராளுமன்ற பணிகள் தொடங்கும்.
தேர்தல் ஆணையர் நியமன மசோதா
பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் மேடையில் இருப்பார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமன மசோதா, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் தலைமையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரம் கொண்ட தேர்வுக் குழுவை அமைப்பதை வலியுறுத்துகிறது. இந்த மசோதா உச்ச நீதிமன்ற நீதிபதியை விலக்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் இடம் பெறும் வகையில் குழு அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த சிறப்புக் கூட்டத் தொடர் எதற்கு, என்ன ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறித்தான எந்த தெளிவான தகவல்களும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரம், ஜீரோ நேரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த மாத தொடக்கத்தில் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார்.
“மேலும் இந்த அமர்வு தொடர்பான முழு நிகழ்ச்சி நிரல் கொடுக்கப்பட வில்லை. இதன் மூலம் அரசாங்கம் அதிக மசோதாக்களை கொண்டு வர முடியும். சிறப்பு க் கூட்டத் தொடர் குறித்து இன்னும் தெளிவு இல்லை” என்று டிஎம்சி தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.