புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கப்பட உள்ளது. இந்த கூட்டத் தொடரில் திதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பார்கள், மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (ஜுன் 12) புதன்கிழமை கூறுகையில், “18வது மக்களவையின் முதல் அமர்வு 24.6.24 முதல் 3.7.24 வரை நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம்/உறுதிமொழி, சபாநாயகர் தேர்வு, குடியரசுத் தலைவர் உரை மற்றும் விவாதம் ஆகியவை நடைபெறும்.
ராஜ்யசபாவின் 264வது கூட்டத்தொடர் 27.6.24 அன்று தொடங்கி 3.7.24 அன்று முடிவடையும்” என்று அவர் கூறினார்.
மேலும் கூறிய அவர், “மக்களின் தீர்ப்பை பின்பற்ற வேண்டும். ஆட்சியமைக்க ஆணை கிடைத்தவர்கள் அதைச் செய்ய வேண்டும், எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பவர்களும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.
சிறிய கட்சியாக இருந்தாலும் சரி, பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்கு உண்டு. ஒவ்வொரு எம்.பி.யும் முக்கியமானவர். லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் ஒவ்வொரு கட்சியும் அதன் உரிமையைப் பெறும்.
எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்கு வேறுபட்டது, ஆனால் தேச நலனுக்காக செயல்படுவதே இங்கு குறிக்கோள் ஆகும். வரும் அமர்வில், நாடாளுமன்றத்தின் சுமூகமான மற்றும் ஆக்கப்பூர்வாமான செயல்பாட்டை உறுதிசெய்ய அனைவருக்கும் ஒத்துக்கழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று ரிஜிஜு கூறினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 230 உறுப்பினர்களைக் கொண்டு பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகளாக உள்ளனர். லோக்சபாவில் 99 எம்.பி.க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் ஏற்கனவே பங்குச் சந்தையில் ஊழல் நடந்ததாகக் கூறியுள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறியுள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டுளை எழுப்புவர். விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/lok-sabha-session-june-24-july-3-rajya-sabha-parliament-speaker-9387127/
குடியரசுத் தலைவர் உரையில் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளின் சாதனைகளை எடுத்துரைத்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆக்ரோஷமாக விவாதத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு 303 இடங்களும், காங்கிரஸுக்கு வெறும் 52 இடங்களும் இருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சர்வ சாதாரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. தற்போது பாஜகவுக்கு 240 இடங்களும், காங்கிரஸுக்கு 99 இடங்களும் கிடைத்துள்ளன.
17-வது மக்களவையில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸின் மொஹுவா மொய்த்ரா, இந்த முறை நாடாளுமன்றம் வருவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.