Advertisment

வடக்கில் ஹிமாச்சல் உடன் 3 மாநிலங்களில் மட்டும் ஆட்சி; இந்தியா கூட்டணிக்குள் சவாலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்

வடக்கில் காங்கிரஸ் கட்சியின் இருப்பு ஹிமாச்சலத்தில் மட்டுமே; இந்தியா முழுவதும் 3 மாநிலங்களுக்குள் சுருங்கிய காங்கிரஸ் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணிக்குள் சவாலை எதிர்கொள்கிறது

author-image
WebDesk
New Update
congress

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி (கோப்பு படம்)

Manoj C G 

Advertisment

லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் அதன் மிக மோசமான தோல்வியில் வட இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதைக் கண்டது, இந்தி இதயத்தில் அதன் கால்தடம் ஒரு சிறிய புள்ளியாகக் குறைக்கப்பட்டது, வெறும் நான்கு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுள்ளது. தெளிவான பதில்கள் அல்லது தீர்வுகள் எதுவுமின்றி, பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் இப்போது மீண்டும் தொடக்க நிலைக்கு திரும்பியுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Party’s presence in North limited to Himachal: Down to 3 states, Congress faces INDIA challenge ahead of LS polls

கடந்த 1998-ம் ஆண்டு சோனியா காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போது, ​​இந்தி பேசும் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியில் இருந்தது.

தற்போது, தெற்கில் தெலங்கானா மற்றும் கர்நாடகா, மற்றும் வடக்கே ஹிமாச்சலப் பிரதேசம் என காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை மூன்று மாநிலங்களுக்குள் மட்டும் ஆட்சியில் உள்ள நிலையில், இப்போது ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது, குறிப்பாக அதன் புதிய-கண்டுபிடிப்பான நம்பிக்கைக்குரிய நலத்திட்டங்களின் டெம்ப்ளேட் (இது ஹிமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் வெற்றி பெற்றது) மற்றும் OBC ஜாதி அரசியல் தோல்வியடைந்துள்ளது.

தெலங்கானா வெற்றி ஒரு ஆறுதல், ஆனால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் தோல்விகள், குறிப்பாக அளவு மற்றும் எண்ணிக்கை கட்சி தலைமையை திகைக்க வைத்துள்ளது. இது காங்கிரஸூக்கு மட்டுமல்ல, பல கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியும் ஒரு கொந்தளிப்பான எதிர்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வடக்கில் பா.ஜ.க.,வுக்கு சவாலாக இருக்க முடியுமா என்ற குழப்பத்தில் உள்ளன.

காங்கிரசுக்கு இந்த தோல்வி மிக மோசமானது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் கட்சி தனது வெற்றிகளில் மிகவும் உறுதியாக இருந்தது, மேலும் ராஜஸ்தானில் நம்பிக்கையின் ஒளியை வைத்திருந்தது, சனிக்கிழமையன்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் கூட்டங்களை ஒருங்கிணைக்க உயர் தலைமை பார்வையாளர்களை அனுப்பியது.

மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த கட்சியின் ஆரம்ப மதிப்பீடு என்னவென்றால், “மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை முன்னிறுத்தி முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு எதிரான ஆட்சிக்கு எதிரான மனநிலை என்ற வாதத்தை பா.ஜ.க அற்புதமாக எதிர்கொண்டது”, அதே நேரத்தில் காங்கிரஸின் பிரச்சாரத்தில் ஆற்றலும் வீரியமும் இல்லை. கமல்நாத் மிகவும் களைப்பும் சோர்வுமான முகத்தைக் காட்டினார்... அதே பழைய தலைமை... புதிதாக எதுவும் இல்லை. எங்கள் வாக்குறுதிகள் சிவராஜ் சிங் சவுகானின் நலத் திட்டங்களைப் பிரதிபலித்தன... இரண்டிற்கும் சிறு சிறு வித்தியாசங்கள் தான்" என்று கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

ஆனால் இந்தப் பிரச்சனை எல்லாம் இரண்டாம் கட்டம் தான். காங்கிரசுக்கு மூன்று மாநிலங்களிலும் சக்திவாய்ந்த தலைவர்கள் இருந்தனர். சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல் மற்றும் டி.எஸ் சிங் தியோ; மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மற்றும் திக்விஜய சிங்; மற்றும் ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட். ஆனால் பா.ஜ.க மற்றும் அதன் மோடியை மையமாகக் கொண்ட பிரச்சாரத்துடன் நெருங்க முடியவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர்களின் ஆரம்ப மதிப்பீட்டிற்காக பல காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியது, அவர்கள் அனைவரும் பதில்களைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டனர்.

ராமர் கோயில் மற்றும் சனாதன தர்மம் சர்ச்சை தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,” என்று கட்சியின் ஒரு தலைவர் கூறினார்.

மற்றொரு தலைவர் ஓ.பி.சி அரசியல் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை, ஒருவேளை, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். ராகுல் காந்தியின் இந்த முழு OBC பேச்சும் உயர் சாதி வாக்குகளை ஒருங்கிணைத்ததா என்பதை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றப்போது, ​​ஓ.பி.சி முதல்வர்களால் வெற்றி பெற முடியவில்லை (அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்என்று ஒரு தலைவர் கூறினார்.

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஏ. ரேவந்த் ரெட்டி, கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, ​​ஹைதராபாத் காந்தி பவனில், ஞாயிற்றுக்கிழமை, டிச. 3, 2023. (PTI புகைப்படம்)

காங்கிரஸின் ஒரு பிரிவினர் அழிவிலும் நம்பிக்கையைக் கண்டனர். காங்கிரஸ் வலுவாக செயல்பட்டிருந்தால், இந்தியா கூட்டணியை நாங்கள் புறக்கணித்திருப்போம். இப்போது நாங்கள் கூட்டணியை நிராகரிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அது வெள்ளி ரேகை (சிக்கலான நேரத்தில் கிடைக்கும் நம்பிக்கை),'' என, கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

சில கடுமையான முடிவுகளும் இருந்தன. "ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் பிரச்சாரங்கள் தெற்கைத் தவிர வேறு எங்கும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை" என்று ஒரு தலைவர் கூறினார்.

காங்கிரஸுக்கு உடனடி சவால், அதன் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் மீட்டெடுப்பதாகும். பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் நடந்த கூட்டங்களுக்குப் பிறகு ஏற்பட்ட வேகத்தை காங்கிரஸ் தடுத்து நிறுத்தியதற்காக கூட்டணிக் கட்சிகளில் பெரும்பாலானோர் வருத்தப்படுகிறார்கள். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்ததால், அவர்களை பிரச்சாரத்தில் இருந்து விலக்கி வைத்தது மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை மேசைக்குக் கொண்டு வருவதற்கான பிராந்தியக் கட்சிகளின் முயற்சிகளில் கல்லெறிந்தது.

சட்டசபை தேர்தலில் நல்ல பலன் கிடைத்தால் பேச்சு வார்த்தையில் வெற்றி கிடைக்கும் என்பது காங்கிரசின் நம்பிக்கை. ஆனால், இந்தி மையப்பகுதியில் அதன் அழிவு, காங்கிரஸுக்கு எதிராக நிற்க பிராந்தியக் கட்சிகளை உற்சாகப்படுத்தலாம், ஏனெனில் அவர்களில் பலர் அதை ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

"2024-ல் பிராந்தியக் கட்சிகள் சிறப்பாகச் செயல்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெறும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும்... பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாகச் செயல்படும். எனவே காங்கிரஸ் தான் தனது ஆட்டத்தை சிறப்பாக ஆட வேண்டும்... எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பாலான முக்கியத் தொகுதிகளில் பா.ஜ.க.,வுடன் நேரடிப் போரில் ஈடுபட்டுள்ளது... கூட்டணியின் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் கட்சிதான் அந்தக் கூட்டணியின் பலவீனமான இணைப்பாக இருப்பது ஒரு முரண்பாடான விஷயம்," என்று காங்கிரஸ் கட்சியை சேராத தலைவர் ஒருவர் கூறினார்.

”இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி. லோக்சபா தேர்தலுக்கு சற்று முன் நடந்ததற்கு வருந்துகிறோம். இது இந்தியா கூட்டணியின் தோல்வியல்ல. காங்கிரஸ் இப்போது டிசம்பர் 6-ம் தேதி கூட்டியிருக்கும் கூட்டம்... அதற்கு முன்பே கூட்டப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இந்தியா கூட்டணியின் அங்கத்தவர்களை நம்பியிருக்க வேண்டும், மேலும் கூட்டணி கட்சியினர் காங்கிரஸுக்குப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்என்று மூத்த ஜே.டி(யு) தலைவர் கே.சி தியாகி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

"மூன்று மாநிலங்களில், இது பா.ஜ.க.,வின் வெற்றிக் கதையை விட காங்கிரஸின் தோல்வி" என்று திரிணாமுல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். "நாட்டில் பா.ஜ.க.,வை தோற்கடிப்பதற்கான போரில் தலைமையை வழங்கக்கூடிய கட்சி திரிணாமுல் காங்கிரஸ்" என்றும் அவர் கூறினார்.

சில காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு மோடியை எதிர்க்கக்கூடிய கவர்ச்சியான மைய முகம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டனர். "நாங்கள் மாநிலங்களில் பிரச்சாரத்தை கண்டிப்பாக உள்ளூர் அளவில் வைக்க முயற்சித்து வருகிறோம்... ஏனெனில் பா.ஜ.க ஒரு பக்கம் மோடியுடன் அதிபர் தேர்தல் மாதிரியான போட்டியாக தேர்தலை மாற்றுகிறது... இந்த வியூகத்தின் மூலம் கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தை நாங்கள் வெற்றி பெற முடிந்தது... 2024 தேர்தலை மோடி மற்றும் யாருக்கு எதிராக பா.ஜ.க வடிவமைக்கும்... காங்கிரஸிடமோ அல்லது இந்தியா கூட்டணியிடமோ பதில் இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று ஒரு கட்சித் தலைவர் கூறினார்.

தோல்வியால் தெளிவடைந்த காங்கிரஸ், இந்தியா கூட்டணியை நினைவு கூர்ந்தது. இந்த நான்கு மாநிலங்களின் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முழு பலத்துடன் பங்கேற்றது. எங்கள் எண்ணற்ற தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தோல்வியால் மனம் தளராமல், இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இரட்டை உற்சாகத்துடன் மக்களவைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது முதல் பதிலில் தெரிவித்துள்ளார்.

வடக்கில் காங்கிரஸ் அழிந்துவிடும் என்ற போக்குகள் தெளிவாகத் தெரிந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சி எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்தின் ரகசிய ட்வீட், கட்சியில் உள்ள மனநிலையை சுருக்கமாகக் கூறியது. "தெற்கு!" என்று அவர் X தளத்தில் பதிவிட்டார்.

சித்தாந்தப் போராட்டம் தொடரும் என ராகுல் தெரிவித்துள்ளார்.

"சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய காங்கிரஸ் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் டெல்லியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே அக்கட்சி மீண்டும் எழுச்சி பெற்று, மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, மத்தியில் ஆட்சியை அமைத்தது. நம்பிக்கையுடனும், உறுதியான உறுதியுடனும் இந்திய தேசிய காங்கிரஸ் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிறதுஎன்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment