ஆந்திர மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், முன்னாள் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினருமான ஜி. பானுபிரகாஷ் ரெட்டி, திருப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், ‘பார்வேட்டை மண்டபம்’ புதுப்பிக்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் புதுப்பித்த பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் காட்டி இடிக்கப்பட்டதைக் காட்டினார்.
திருமலையில் உள்ள ‘பார்வேட்டை மண்டபம்’ சீரமைப்பு என்ற பெயரில் அகற்றப்பட்டது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (டிடிடி) பா.ஜ.க சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 600 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதை இடித்தது சட்டத்தை மீறிய செயல் என்றும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாக அக்கட்சி கூறியது.
ஆந்திர மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஜி. பானுபிரகாஷ் ரெட்டி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அக்கட்சி திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
பா.ஜ.க தலைவரும் வழக்கறிஞருமான கே. அஜய் குமார் அளித்துள்ள சட்டப்பூர்வமான நோட்டீஸில், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையின் கருத்தைப் பெறாமல், இருபது ஆண்டுகளுக்கு முன், 1000 தூண்கள் கொண்ட மண்டபம் (சாளுவ மல்ல தேவராயரால் 18.1.1464ல் கட்டப்பட்டது) இடிப்பு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1958-ம் ஆண்டின் சட்டம் 24 மற்றும் 1960 ஆம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச சட்டம் 7-ன் திருத்தங்கள் மற்றும் 2010-ம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின் படி, 75 ஆண்டுகளுக்கும் மேலான எந்தவொரு கட்டிடமும் அல்லது நினைவுச்சின்னமும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், திருமலையில் பழமையான பார்வேட்டை மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் அதன் மாநில தலைமையகம் மூலம் புகார் அளிக்கவும் கட்சி ஆலோசித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“