Advertisment

நடு வானில் பரபரப்பு: விமானத்தில் பறந்த பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்!

சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த விமானிகளின் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ஜெட் ஏர்வேஸ் விமானம்:

மும்பையில் இருந்து இன்று (20.9.18) காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 166 பயணிகள் பயணித்தனர்.  விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலியே  அவசர அவசரமாக  தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த பயணிகளின் காது மற்றும் மூக்கில்   ரத்தம்   வழிந்ததால்  பயணிகள் தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது. சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததற்கு விமானத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமான சிப்பந்தி மறந்துவிட்டதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

publive-image

இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள் உள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Jet Airways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment