விமான ஓடுதளத்தில் பயணிகள் அமர்ந்து சாப்பிட்டதற்காக, இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை விமான நிலையத்திற்கு ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவாவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், பனிமூட்டம் காரணமாக கடந்த திங்கள்கிழமை மும்பைக்குத் திரும்பியது. விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகள், விமான ஓடு தளத்தில் அமரவைக்கபட்டுள்ளனர். அதில் சிலர் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த உணவு சாப்பிடும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கபப்டவில்லை என்று இண்டிகோ விமான நிறுவனத்திக்கும் மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கும் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது.
இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ. 60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை விமானநிலையத்திற்கு டிஜிசிஏ ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பனிமூட்டம் போன்ற சூழலில் விமானங்களை இயக்கும் திறன்கொண்ட விமானிகளைப் பணியில் அமர்த்தாதது தொடர்பாக ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் , இந்த விமான நிறுவனங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“