Passport online application: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் பாஸ்போர்ட் அப்ளை செய்துக் கொள்ள அனுமதிக்கிறது.
இத்திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, பள்ளி/கல்லூரி சான்றிதழ் ஆகியவை அவசியம்.
சரி இவையனைத்தையும் தயார் நிலையில், வைத்துக் கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள முறையில் ஈஸியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?
ஸ்டெப் 1 – passportindia.gov.in என்ற தளத்தில் நுழைந்து ஆர்டினரி ஆப்ஷன் என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 2 – அதில் ‘Register Now’ என்பதை க்ளிக் செய்தால், அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது வரிசையாக வரும்.
ஸ்டெப் 3 – அடுத்தப் பக்கம் திறந்து, அதில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய விஷயங்கள் வரிசையாக வரும். அனைத்தையும் பூர்த்தி செய்து, பதிவு செய்து விட்டு, லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு கொண்டு உள் நுழையவும்.
ஸ்டெப் 4 – உள்ளே நுழைந்ததும், ’Apply for New Passport என்பதைக் க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 5 – அதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்து, சப்மிட் கொடுக்கவும்.
ஸ்டெப் 6 – பின்னர் ’Pay and Schedule Appointment’ என்பதைக் க்ளிக் செய்யவும். அப்போது புதிய பக்கம் திறக்கும், அதில் பணம் செலுத்திக் கொள்ளவும். அதோடு அப்பாயின்மெண்டையும் உறுதி செய்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 7 – பிரிண்ட் அல்லது உங்கள் எண்ணுக்கு வரும் எஸ்.எம்.எஸ் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லலாம்.
ஸ்டெப் 8 – இறுதியாக அசல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகவும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Passport online application easy step to apply passport online