/indian-express-tamil/media/media_files/qztxGPEuqvR1QwlYWDGG.jpg)
பாஸ்போர்ட் சேவை இணையதளம் செப்டம்பர் 20-ம் தேதி இரவு 8 மணி முதல் 23-ம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்படுள்ளது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிக்கை விடுத்துள்ளார்.
பாஸ்போர்ட் சேவை இணையதளம் செப்டம்பர் 20-ம் தேதி இரவு 8 மணி முதல் 23-ம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்படுள்ளது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணி முதல் செப்டம்பர் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைபேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.