யோகா குரு பாபா ராம்தேவ் கோவிட்-19 ஐ குணப்படுத்தும் முதல் ஆயுர்வேத மருந்துகள் என்று அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் மருந்துகளின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பதஞ்சலியின் கூறுவதைப் பற்றி உண்மைகள் அல்லது விவரங்கள் குறித்து தெரியாது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்துகளின் பெயர்கள் மற்றும் கலவை குறித்த ஆரம்ப விவரங்களை பதஞ்சலி ஆயூர்வேத நிறுவனத்திடம் ஆயுஷ் அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், அதன் தளம், மருத்துவமனைகளில் கோவிட்-19க்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஆராய்ச்சி நெறிமுறை, மாதிரிகளின் அளவு, நிறுவன நெறிமுறைக் குழுவின் அனுமதி, சி.டி.ஆர்.ஐ பதிவு மற்றும் ஆய்வின் முடிவுகள், அதாவது இந்த பிரச்னையில் முறையாக ஆராயும் வரை அத்தகைய உரிமைகோரல்களை விளம்பரம் செய்வதை நிறுத்துங்கள்” ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீடத்தில், உயிர் வாழ்வதற்கான ஆதரவு தேவை உள்ளவர்களைத் தவிர, கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செய்த மருத்துவ பரிசோதனைகளின் போது, அவர்களுடைய ‘கொரோனில்’ மற்றும் ‘ஸ்வாசரி’ மருந்துகள் 100 சதவீதம் சாதகமான முடிவுகளைக் காட்டியதாக பதஞ்சலி கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19க்கு எந்தவொரு மாற்று சிகிச்சை இருப்பதாக விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை. மேலும், ஐ.சி.எம்.ஆர் அல்லது சுகாதார அமைச்சகம் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
கோவிட்-19 சிகிச்சைக்காக உரிமை கோரப்படும் ஆயுர்வேத மருந்துகளின் உரிமம் மற்றும் தயாரிப்பு ஒப்புதல் விவரங்களை வழங்க உத்தரகாண்ட் அரசாங்கத்துடன் தொடர்புடைய மாநில உரிம ஆணையத்திடம் அமைச்சகம் கோரியுள்ளது.
ஹரித்வாரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மருந்துகளைத் அறிமுகப்படுத்திய ராம்தேவ், “7 நாட்களில் 100 சதவீத குணமடைகின்றனர்” என்று கூறியிருந்தார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துடன் தொலைபேசி நேர்காணலில், பேசிய ராம்தேவ், மருந்துகளை பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் ஜெய்ப்பூரின் தனியாருக்குச் சொந்தமான தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, மருத்துவ ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட சோதனை அடிப்படையிலான ஆதாரங்களுடன் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
ஐ.சி.எம்.ஆர் போன்ற அரசு நிறுவனங்களால் இந்த மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா என்று கேட்கப்பட்டபோது, டெல்லி, அகமதாபாத் மற்றும் மீரட் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த மருந்துகளின் மருத்துவ கட்டுப்பாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ராம்தேவ் கூறினார். மேலும், மருந்து தரக்கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ஆர்.சி.டி (ரேண்டம் மருத்துவ சோதனை) சோதனை ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட தேசிய மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டதாகவும் ராம்தேவ் கூறினார்.
மேலும், “இந்திய மருத்துவ சோதனை பதிவகம் (சி.டி.ஆர்.ஐ) மற்றும் தேவையான அனைத்து முறைகளிலும் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த சோதனை செய்யப்பட்டது. இதுபோன்ற மருத்துவ பரிசோதனைகளுக்கு நவீன விஞ்ஞானத்தால் அமைக்கப்பட்ட அனைத்து அளவுருக்களையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்” என்று கூறினார்.
கொரோனில் மருந்து தூய அமிர்தவல்லி இலை, துளசி மற்றும் அஸ்வகந்தா ஆகியவற்றின் சாற்றில் தயாரிக்கப்படுகிறது. அடுத்த திங்கட்கிழமை முதல் மொபைல் ஆப் மூலம் மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்று ராம்தேவ் தெரிவித்திருந்தார்.
உலக சுகாதார அமைப்பு மாற்று சிகிச்சை முறை உரிமை கோரல்களுக்கு எச்சரிக்கையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “சில மேற்கத்திய, பாரம்பரிய அல்லது வீட்டு வைத்தியங்கள் கோவிட்-19இன் அறிகுறிகளைத் தணிக்கும் மற்றும் தணிக்கும் போது, தற்போதைய மருத்துவம் நோயைத் தடுக்க அல்லது குணப்படுத்த முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோவிட்-19 க்கான தடுப்பு அல்லது சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பு உள்ளிட்ட எந்த மருந்துகளுடனும் சுய மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை. இருப்பினும், மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருந்துகளை உள்ளடக்கிய பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"