Advertisment

பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டம்: 2019 தேர்தலில் இருந்து எதிர்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்

பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தில் 15 எதிர்கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த 15 கட்சிகளில், 3 கட்சிகள் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சிகளாக அங்கீகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டம்

பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டம்

பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தில் 15 எதிர்கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த 15 கட்சிகளில், 3 கட்சிகள் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சிகளாக அங்கீகரித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ (எம்) என்ற மூன்று கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், ஒரு கட்சி 4 அல்லது அதற்கு அதிகமான மாநிலங்களில் மக்களால் அறியப்பட வேண்டும். மேலும்  அக்கட்சியின் வேட்பாளர் ஒட்டுமொத்த வாக்குகளில் 6 % நாடாளுமன்ற தேர்தலில் பெற்றிருக்க வேண்டும்.

2024ம் தேர்தலில் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுக்க வேண்டுமென்றால், பாட்னாவில் கூடிய 15 எதிர்கட்சிகளும் சரியான முறையில் தொகுதிகளை பங்கீடு செய்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 15 எதிர்கட்சிகளும் சேர்ந்து ( சிவசேனா கட்சி) 154 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

பாஜக 436 தொகுதிகளில் போட்டியிட்டது, அதில் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று,  37.7 % வாக்குகளை பெற்றது. இந்நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடந்தவற்றை திரும்பி பார்க்கலாம்.

காங்கிரஸ்

2019ம் ஆண்டு காங்கிரஸ் 421 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 52 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 19.67% வாக்குகளை பெற்றது. இந்நிலையில் 2019-க்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஹிமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2014ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளில் போட்டியிட்டது. 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 19.52 % வாக்குகளை பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ்

2019ம் ஆண்டு 62 தொகுதிகள் ( 42 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் ) போட்டியிட்டது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 3 வது பெரும் எதிர்கட்சியாக மாற்றியது. 4.1 % வாக்குகளை பெற்றது. ஆனால் 2014ம் தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மட்டுமே அதன் செல்வாக்கை கொண்டுள்ளது.

தேசிய காங்கிரஸ் கட்சி ( என்.சி.பி)

2019 தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே வெற்று பெற்றது. 1.4 %  வாக்குகளை பெற்றது. 2014-ல் என்.சி.பி கட்சி 36 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றிபெற்றது. 1.58 % வாக்குகளை பெற்றது.

மகாராஷ்டிராவிற்கு வெளியே இக்கட்சியின் வளர்ச்சி விரிவாகாததால் கடந்த ஏப்ரலில், இதன் தேசிய கட்சிக்கான அங்கீகாரம் நீக்கப்பட்டது.

சிபிஐ (எம்)

2019ம் தேர்தலில் 69 இடங்களில் போட்டியிட்டு, 3 இடங்களில் வெற்றி பெற்றது. 1. 77 % வாக்குகளை பெற்றுள்ளது. 2014ம் தேர்தலில்  சிபிஐ (எம்) 93 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 3.28 % வாக்குகளை பெற்றது. கேரளா மற்றும் திரிபுராவில் இக்கட்சியின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் நீக்கப்படவில்லை.

சிபிஐ

2019 தேர்தலில் 49 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வெற்றி பெற்றது. 0.59 % வாக்குகளை பெற்றது. 2014 தேர்தலில் 67 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 0.79 % வாகுகளை பெற்றது. பிகாரிலும் இக்கட்சிக்கு செல்வாக்கு இருந்தாலும், தேசிய கட்சி என்ற அங்கீகாரம்  இதற்கு கிடைக்கவில்லை.

மாநில கட்சிகள் :  ராஷ்டிரிய ஜனதா தளம்

2019ம் தேர்தலில்  21 இடங்களில் போட்டியிட்டது. 19 தொகுதிகள் பிகாரிலும், 1 தொகுதி ஜார்கண்டிலும் போட்டியிட்டது. இதில் 2 இடங்களில்  வெற்றிபெற்றது.

2014ம் தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

ஜனதா தளம்

2019 தேர்தலில் பிகாரில் 17 இடங்களிலும், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் 16 இடங்களில் வெற்றி பெற்றது. 2014 தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக

இந்நிலையில் 2019 தேர்தலில் 39 லோக் சபா தொகுதிகளில் 24 இடங்களில் திமுக போட்டியிட்டது. காங்கிரஸ், சிபிஐ ( எம்), விசிக, மதிமுக ஆகியோருடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் 24 தொகுதிகளும் வெற்றி பெற்றது.

2014ம் தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு, ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.

ஆம் ஆத்மி

2019 தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்டது. பஞ்சாபில் 13 இடங்களிலும், டெல்லியில் 7 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.

2014ம் தேர்தலில் 7 இடங்களில் ( டெல்லி) போட்டியிட்டு, ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. பஞ்சாப்பில் 4 இடங்களை பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment