Advertisment

ஆந்திர துணை முதல்வராகும் பவன் கல்யாண்: மொத்த அமைச்சர்கள் பட்டியல்

நடிகரும், ஜன சேனா கட்சியின் (ஜே.எஸ்.பி) தலைவருமான கொனிடேலா பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pawan Kalyan to be Andhra Pradesh deputy CM as Chandrababu Naidu hands out portfolios Tamil News

முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பவர்களின் முழுபட்டியல்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Pawan Kalyan to be Andhra Pradesh deputy CM as Naidu hands out portfolios

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் ஆந்திர  சட்டசபை தேர்தல் முடிவுகளும் கடந்த 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 இடத்திலும், பா.ஜ.க 8 இடத்திலும் வெற்றி பெற்றன. 

இதனையடுத்து, 4-வது முறை ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 12 ஆம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு அரசு இன்று வெள்ளிக்கிழமை தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகரும், ஜன சேனா கட்சியின் (ஜே.எஸ்.பி) தலைவருமான கொனிடேலா பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

55 வயதான பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், அவரை துணை முதல்வராக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார். மேலும், பவன் கல்யாண் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய கூடுதல் துறைகளுடன் அமைச்சராகவும் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் வி அனிதா இருப்பார் என்றும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் நாயுடு ஐ.டி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பவர்களின் முழுபட்டியல்: 

அமைச்சர் - கட்சி - இலாகா

என் சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசம் கட்சி - பொது நிர்வாகத் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளுக்கும் அமைச்சர். 

கொனிடேலா பவன் கல்யாண் - ஜே.எஸ்.பி - துணை முதல்வர், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல், சுற்றுச்சூழல் மற்றும் காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். 

என் லோகேஷ் நாயுடு - தெலுங்கு தேசம்  - ஐ.டி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ். 

கிஞ்சராபு அட்சேன்நாடு - பா.ஜ.க - விவசாயம், ஒத்துழைப்பு மற்றும் சந்தைப்படுத்தல். கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளம்

கொல்லு ரவீந்திரா  - தெலுங்கு தேசம் - சுரங்கங்கள் மற்றும் புவியியல், கலால்

நாதெண்டலா மனோகர் - ஜே.எஸ்.பி - உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரங்கள்

பொங்குரு நாராயண - தெலுங்கு தேசம் -  நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு

அனிதா வாங்கலபுடி தெலுங்கு தேசம் - உள்துறை, பேரிடர் மேலாண்மை

சத்ய குமார் யாதவ் - பா.ஜ.க - மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரம், குடும்ப நலன்

டாக்டர் நிம்மலா ராமாநாயுடு  - தெலுங்கு தேசம் - நீர்வள மேம்பாடு

என் முகமது பாரூக் - தெலுங்கு தேசம் - சட்டம், சிறுபான்மை மேம்பாடு

அனம் ராமநாராயண ரெட்டி - தெலுங்கு தேசம் -  நன்கொடைகள் (என்டோவ்மென்ட்ஸ்)

பையாவுல கேசவ்  - தெலுங்கு தேசம் - நிதி, திட்டமிடல், வணிக வரிகள் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள்

அனகனி சத்ய பிரசாத் - தெலுங்கு தேசம் -  வருவாய், முத்திரைகள் மற்றும் பதிவுகள்

கொலுசு பார்த்தசாரதி  - தெலுங்கு தேசம் -  வீட்டு வசதித்துறை மற்றும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை

டாக்டர் டி பாலா வீராங்கநேய சுவாமி - தெலுங்கு தேசம் - சமூக நலன் (ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன்), செயலகம், கிராம தொண்டர்கள்

கோட்டிப்பட்டி ரவிக்குமார் - தெலுங்கு தேசம் -  எனர்ஜி

கந்துலா துர்கேஷ் - ஜே.எஸ்.பி - சுற்றுலா, கலாச்சாரம், ஒளிப்பதிவு

கும்மாடி சந்தியா ராணி - தெலுங்கு தேசம் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், பழங்குடியினர் நலன்

பி சி ஜனார்தன் ரெட்டி - தெலுங்கு தேசம் - சாலைகள் மற்றும் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, முதலீடுகள்

டி ஜி பாரத் - தெலுங்கு தேசம் - தொழில்கள் மற்றும் வர்த்தகம், உணவு பதப்படுத்துதல்

எஸ் சவிதா - தெலுங்கு தேசம் - பிற்படுத்தப்பட்டோர் நலன், கைத்தறி

வாசம்செட்டி சுபாஷ் - தெலுங்கு தேசம் - தொழிலாளர், தொழிற்சாலைகள், கொதிகலன்கள் மற்றும் வேலைவாய்ப்பு, காப்பீட்டு மருத்துவ சேவைகள்

கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் - தெலுங்கு தேசம் -  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கம், வெளிநாடு வாழ் இந்தியர், அதிகாரமளித்தல் மற்றும் உறவுகள்

மண்டபள்ளி ராம் பிரசாத் ரெட்டி - தெலுங்கு தேசம் - போக்குவரத்து, இளைஞர் மற்றும் விளையாட்டு. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pawan Kalyan Andhra Pradesh N Chandrababu Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment