சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும், சுத்தமான தண்ணீரை பெறுவதற்கும், நோய்யற்ற வாழ்வை வாழ்வதற்கும் மக்களுக்கு உரிமை இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல் முறையீடு செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு தீர்பளித்தது. அதில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு உள்ளது என்ற ஆலையின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.
எடுத்த உடன் தொழிற்சாலையை மூடுவது சிறந்த தேர்வல்ல, மீண்டும் மீண்டும் விதிகளை மீறுவது உயர்நீதிமன்றமோ, அதிகாரிகளோ, கடமையிலிருந்து தவறியிருந்தாலொழிய ஆலையை மூடுவதை தவிற வேறு முடிவெடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டின் உற்பத்தி கட்டமைப்புக்கும், தூத்துக்குடி பகுதியில் வேலைவாய்ப்புக்கும் ஸ்டெர்லைட் ஆலை பங்களித்தது எங்களுக்கு தெரியும் என்றும் நீடித்த வளர்ச்சியை மாசுபடுத்துகிறவர் அதற்கான விலையை தருவது, பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது என்ற கோட்பாடுகளையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது இந்த தீர்ப்பு 17 பக்கள் கொண்ட விரிவான உத்தரவை கொண்டது. 2013ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் பல வாய்ப்புகளை கொடுத்தும் கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் தவறிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களுடைய சுகாதாரம் மிக முக்கியமானது எனக் கூறிய உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் மனுவை தள்ளுபடி செய்தது.
Read in english
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"