scorecardresearch

கொரோனாவுக்கு பயந்தா திருவிழா கொண்டாட முடியுமா பாஸ்? ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கர்நாடகா!

இவர்களுக்கு விழா கொண்டாட அனுமதி வழங்கிய பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் என்.சி. கல்மாத் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

People in Kolagondanahalli of Karnataka's Ramanagara gathered for local fair
People in Kolagondanahalli of Karnataka's Ramanagara gathered for local fair

People in Kolagondanahalli of Karnataka’s Ramanagara gathered for local fair : கொரோனா சூழல் எப்போது முடிவுக்கு வரும், எப்போது அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம்.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்று மக்களை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது.  50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்திருக்கிறது.

மேலும் படிக்க : சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஓய்வு : பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

ஆனால் ஊரடங்கு உத்தரவு பற்றியும் அரசின் நடவடிக்கைகள் பற்றியும் எந்த ஒரு கவலையும் இன்றி கர்நாடகாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து கிராமத் திருவிழா கொண்டாடி உள்ளனர்.

கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் கொலகொண்டனஹல்லி கிராமத்தில் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று கூடி கிராம திருவிழா கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் என்றும், கொரோனா  குறித்தும் மற்ற மக்களின் நிலை குறித்தும் இவர்களுக்கு பிரச்சனையே இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.  கிராம விழா குறித்து கொலகொண்டனஹல்லி தாசில்தார், ராமநகரா துணை ஆணையரிடம் புகார் அறிவித்தார். பிறகு, விழா கொண்டாட அனுமதி வழங்கிய பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் என்.சி. கல்மாத் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: People in kolagondanahalli of karnatakas ramanagara gathered for local fair