Advertisment

குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் : ஒபிசி தலைவர் அல்பேஷ் தாகூர் பேட்டி

ஒதுக்கீடுக்கான தேவை அதிகம் ஆகியுள்ளது. அதற்கு காரணம் பிஜேபி அரசின் வீழ்ச்சியே. அனைவரும் தங்கள் சமூகத்தின் ஏழை குழந்தைக்காக மட்டுமே ஒதுக்கீடு கேட்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
alpesh-thakor

குஜராத் தேர்தலை முன்னிட்டு ஒபிசி தலைவர் அல்பேஷ் தாகூர், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எதனால் காங்கிரஸில் சேர்ந்தார்? ஏன் பிஜேபி அரசு எதிராக திரும்பினார்? என்ற கேள்விகளுக்கான கருத்துகளை நம்முடன் பகிர்கிறார் அல்பேஷ்.

Advertisment

ஏன் அரசியலில் இணைந்தீர்கள்? அதிலும் காங்கிரஸ் உடன் இணையும் காரணம் என்ன?

பிஜேபி மீது உள்ள கோபமே முக்கிய காரணம். மேலும் இதுவே மக்களின் விருப்பமும் கூட. பல மக்கள் சந்திப்பு நடத்தி வாக்கு எடுத்த பின்னரே இன்று நான் காங்கிரஸிடம் இணைந்துள்ளேன். நான் ஏற்கனவே கூறி இருந்தேன், பிஜேபி அரசு முன்னேற்றவில்லை என்றால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று. நான் பிஜேபி உடன் இணைந்து இருந்தால் நான் விலைப்போனதாக மக்கள் எண்ணுவார்கள்.

நீங்கள் காங்கிரஸுடன் இணைந்ததால் உங்கள் தரம் குறைந்து விட்டது என எதிர் கட்சியினர் சொல்கிறார்களே?

நாங்கள் இப்பொழுதுதான் அனைவரையும் சந்தித்து வருகிறோம். வட குஜராத்தின் வேட்பாளர்களை அறிவித்த பின்னரே நமக்கு முழுமையான சூழல் புரியும்.

நீங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டீர்கள் என்று கூறியதற்காக பிஜேபி உங்களை விமர்சித்துள்ளது. இதனால் ஏதேனும் மாற்றம் உள்ளதா?

நாங்கள் தொடர்ந்து கூறுவது இது மட்டும் தான், பிஜேபி அரசு சரியாக செயல் படவில்லை எனில் நாங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவோம். கடந்த இரண்டு வருட ஆட்சியில் நாங்கள் கூறிய எதையும் பிஜேபி அரசு செய்யவில்லை. உதரணாமாக விவசாயிகளின் கடன் தள்ளுப்படி, வேலை இல்லா திண்டாட்டம், கல்வி உயர்வு என எதையும் செய்யவில்லை.

பட்டிடர் சமூகத்தின் ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்த ஒதுக்கீடு ஒபிசி-யின் பங்கை நிச்சயம் குறைக்குமா?

ஏன் அனைத்து பேச்சுகளும் ஒதுக்கீட்டை சுற்றியே அமைகிறது? இதை தாண்டி பல பிரச்சனைகள் இங்குள்ளது. விவசாயிகள், வேலை வாய்ப்பு, கல்வி முன்னேற்றம், சிறு தொழில் என பல இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது ஜிஎஸ்டி மற்றும் டிமான்ட்டைசேசனும் ஒரு சிக்கல் தான். இந்த ஒதுக்கீடு ஒரு போராட்டம், மத்தியதரவர்க்கமும் ஏழைகளும் அகந்தைக்கு எதிராக போராடுகிறார்கள்.

ஒதுக்கீடுக்கு தேவை இருக்கக் கூடாது. அரசும் அதன் கொள்கைகளும் மாற வேண்டும் என்பது உங்கள் கருத்தா?

இல்லை. இன்று ஒதுக்கீடுக்கான தேவை அதிகம் ஆகியுள்ளது. அதற்கு காரணம் பிஜேபி அரசின் வீழ்ச்சியே. அனைவரும் ஒதுக்கீடு கேட்பதற்கான காரணம் தங்கள் சமூகத்தின் ஏழை குழந்தைக்காக மட்டுமே. ஜாதி பாகுபாடு இன்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஜனநாயக உரிமையை கொடுக்க வேண்டும். இது குஜராத்துக்கு மட்டும் அல்ல மொத்த இந்தியாவிற்கும் பொருந்தும். ஒபிசிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு, மேல் ஜாதியின் ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும்.

சனஸ்மா தொகுதியில் இருந்து நீங்கள் போட்டிப்போடுகிரீர்கள் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறதே?

இல்லை. அனைத்து சட்டமன்ற தேர்தலையும் நான் கவனிக்கிறேன். அதன் பின் கட்சி மற்றும் மக்கள் சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன்.

இளைஞர்கள் காங்கிரசிற்கு வாக்களிப்பார்கள் என நீங்கள் நினைப்பதற்கு காரணம் என்ன?

கடந்த 22 வருடமாக பிஜேபி செய்தது என்ன? இன்று குஜாரத்தில் 60 லட்ச வேலை இல்லா இளைஞர்கள் உள்ளனர். அனைத்து இளைஞர் பட்டாளமும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்த மக்களுக்கு மாற்றம் வேண்டும். இது குஜராத்திற்கும் பிஜேபிக்கும் இடையே நடக்கும் தேர்தல். காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் அல்ல.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்த உள்ளீரா?

நவம்பர் 27ல் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். சௌராஷ்டிராவில் தொடங்கி, வட மற்றும் மைய குஜராத்தில் அமையும். பிஜேபியிடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும். குஜராத்திற்கு அவர்கள் கொண்டு வந்தது என்ன? வெறும் பொய்களும் போலி வாக்குறுதிகளும் தான். பிஜேபி ஜாதி பிரச்னையை தூண்டி வாக்காளர்களை திசை திருப்ப பாக்கிறார்கள்.

பிஜேபி-யின் வலுவான வேலை ஆட்களையும், சாவடி நிர்வாகத்தையும் காங்கிரஸ் எப்படி எதிர் கொள்ளும்?

காங்கிரஸ் சாவடி நிர்வாகத்தை பார்த்துக்கொள்ளும். எங்களால் வாக்களர்களை சாவடிக்கி வர வைக்க முடியும் என்றால் நிச்சயம் எங்களுக்கு அவர்களை வாக்களிக்க செய்ய முடியும். ஒரு சாவடிக்கு 100 தன் ஆர்வலர்களை நியமித்துள்ளோம். இதில் பெண்கள், குழந்தைகள் இளைஞர்கள் என அனைவரும் அடங்குவர்.

கட்சியில் ராகுல் காந்தியின் உயர்வால் இந்த தேர்தலில் ஏதேனும் மாற்றம் வருமா?

ராகுல் காந்திக்கு இளைஞர்களின் ஆதரவு உள்ளதால் நிச்சயம் நல்ல பாதிப்பு இருக்கும். இந்த கால இளைஞர்கள் புதிய தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள்.

பத்மாவதி சர்ச்சையில் உங்கள் கருத்து என்ன?

இதை அரசியல் சிக்கலாக மாற்றுகிறார்கள், ஆனால் வரலாறுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அதை மாற்றி காட்சியளிப்பது, வரலாறை சேதம் அடைய செய்யும்.

Alpesh Thakor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment