வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் என மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். சாலை போக்குவரத்து அமைச்சரான கட்கரி அந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் குறித்து பேசினார்.
நிதின் கட்கரி மும்பையில் பேச்சு
“நல்ல வாக்குறுதிகளையும், கனவுகளையும் முன்னிருத்தும் அரசியல் தலைவர்களையே மக்கள் விரும்புவார்கள் ஆனால் அந்த கனவுகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்களே தூக்கி எறிந்துவிடுவார்கள். அதனால் நிறைவேற்றக்கூடிய கனவுகளையும் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நான் அது போன்ற வாக்குறுதிகளை கொடுப்பவர் அல்ல, ஆனால் அப்படி கொடுத்தால் அதை 100% நிறைவேற்றிவிடுவேன்” என்றார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக நம்பகமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அவரது அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும். 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை திட்டங்கள் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் கட்கரி தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்திர புலனாய்வு மற்றும் அறக்கட்டளை விரிவுரையில் பேசிய அவர், “நான் கட்சியில் தலைவராக இருந்து, எனது எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றால் யார் பொறுப்பு? நான் தான்.” என்றார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் தேர்தலில் பாஜக தோல்வியை கண்ட பிறகு கர்கரி இதனை தெரிவித்தார். மேலும், தோல்விகளுக்கும் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். பின்னர், அவர் பேசியதை திரித்து கூறியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
“ வெற்றிக்கு பல தந்தை இருக்கும் ஆனால் தோல்வி ஒரு அனாதை போல். வெற்றி கிடைக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள பலர் இருப்பார்கள் ஆனால் தோல்வி ஏற்பட்டால் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லவதில் தான் இருப்பார்கள். அதனால் தோல்விகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தலைமவருக்கு இருக்க வேண்டும்.” என்றார்.
மும்பையின் அந்த நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சுக்கள் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். அப்படி அவர் கூறிய வாக்கியங்களில் ஒன்றான “இந்தியாவின் கட்டமைப்பிற்கு பொறுமை தான் மிகப்பெரிய சொத்து” என்று கூறியதை எடுத்துரைத்தார் கட்கரி. மேலும், “நல்ல பேச்சாளராக இருப்பதால் நீங்கள் தேர்தலை வென்றுவிட முடியாது. நன்று கற்றவர்களாக இருக்கலாம் ஆனால் மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் போகலாம். தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தவறு - மக்கள் அத்தகைய போலி விளம்பரங்களை நம்பவும் கூடாது” என்பதை எடுத்துரைத்தார்.
முன்னதாக அவர் பேசியப்போது, “பாஜகவில் இருக்கும் சிலர் குறைவாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக அரசியல்வாதிகள் மஊடகத்திடம் பேசும்போது, சரியாக பேச வேண்டும்” என்றார்.
அதே சமயம், மும்பையில் ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்ச்சியில், கட்கரி முன்னிலையில், நடிகை இஷா கோபிகர் பாஜகவில் இணைந்தார். பாஜக மகளிர் போக்குவரத்து பிரிவின் செயல் தலைவராக இஷா கோபிகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.