Advertisment

அரசு ஏஜென்ஸிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா!

ஆதார் அடையாள அட்டை தரவுகளை வெளிநாடுகளில் சேமித்து வைக்க இயலாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Personal Data Protection Bill listed to be introduced in Lok Sabha

Personal Data Protection Bill listed to be introduced in Lok Sabha

Personal Data Protection Bill  : இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டிருக்கிறது தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா. இந்திய குடிமக்களின் தனித்தகவல்கள் அனைத்தையும் பெற அரசு எந்திரங்களுக்கு அதிக அதிகாரம் தரும் மசோதாவாக இது இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த மசோதா முதலில் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி மூலம் உருவாக்கப்பட்டது. அதில் குடிமக்களின் பாதுகாப்பு, குற்ற விசாரணைகள் மற்றும் குற்றப்பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மட்டும் சில விலக்குகள் அளிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல்கள் தேவைப்படும் நேரத்தில் குடிமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Personal Data Protection Bill எனப்படும் இந்த மசோதா பொதுவாக ப்ரைவசி பில் என்று வழங்கப்படுகிறது. தனிப்பட்ட மனிதர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களை சேகரித்தல், இயக்குதல் மற்றும் செயல் வடிவம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தி தனி நபர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

To read this article in English

அரசு நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த தகவல்கல் அனைத்தையும் வெளிநாட்டில் சேமித்து வைக்க அனுமதி அளிக்கிறது இந்த மசோதா. ஆனால் மிக முக்கியமான சென்சிடிவான தரவுகளான நிதி, சுகாதாரம், பாலியல் தேர்வு, பயோமெட்ரிக், மரபணு, திருநங்கைகளின் நிலை, சாதி மற்றும் மத நம்பிக்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும் என்றும், அரசு அனுமதியுடன், சில நிபந்தனைகள் கீழ் வெளிநாடுகளில் அதனை செயலாக்கம் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிவித்துள்ளது.

இந்த மசோதா ஆதார் அடையாள எண்ணிற்கு விலக்கு அளிக்கிறது. அதிகாரப்பூர்வ அடையாளம் என்பது முக்கியமான தனிப்பட்ட தரவுகளின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதார் டேட்டாக்களை வெளிநாடுகளில் சேமிக்க இயலாது. அதே போன்று கடவுச்சொற்கள் ஆகியவற்றை முக்கியமான தனிநபர் தரவுகள் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

தனிநபர் தகவல்களை பெற குறிப்பிடத்தக்க நம்பகத்தன்மை கொண்ட தகவல்களை வழங்கும் சமூக வலைதளங்கள் இடைத்தரர்களாக செயல்படும். இதன் மூலம் தானாகவே மக்கள் முன் வந்து தங்களின் கணக்குகளை சரிபார்த்து கொள்வார்கள். மேலும் இந்த கணக்கு சரிபார்க்கப்பட்டது என்ற வெரிஃபிகேசன் அடையாளம், அந்த சேவையை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் தெரியும் வகையில் மார்க் செய்யப்படும்.

ஸ்ரீகிருஷ்ணா வரைவின் முதல் பத்தியில் சில மாற்றங்களை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ”இலவச மற்றும் நியாயமான டிஜிட்டல் பொருளாதார சேவையை பெற, தனி நபர்களின் தகவல்களை பாதுகாக்க, முன்னேற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க” என்று ஆரம்பிக்கும் பத்தியில் தற்போது டிஜிட்டல் நிர்வாகம் என்பதையும் இணைத்துள்ளது.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment