குளிர் காலத்தில் கமலா ஆரஞ்சு சாப்பிடுவது நல்லதா?

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின்சி, இதய நோய், சிறுநீரக கற்கள், அனைத்து வகையான தொற்றுநோய்களின் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கும்.

Kamala Orange benefits during winter season : இந்த ஆரஞ்சு பழத்தை குளிர் காலத்தில் சாப்பிடுவதே மிகவும் நல்லது. இது உடல் வெப்பநிலையை சம நிலையில் வைத்திருக்கும். நோயெதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்கும். சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ளும், மற்றும் செரிமான மண்டலத்தை பாதுகாக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின்சி, இதய நோய், சிறுநீரக கற்கள் மற்றும் அனைத்து வகையான தொற்றுநோய்களின் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கும்.

எடையைக் குறைக்க உதவும்

நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவை உண்பதையும் தடுக்கும். இதனால் கலோரிகளை அதிகமாக எடுப்பது குறைந்து, உடல் எடை குறையும். மேலும் இதன் நார்ச்சத்து நல்ல செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. ஆகவே ஆரஞ்சு பழத்தை தினம் உண்டு வாருங்கள்.

வைட்டமின் சி

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, குளிர்காலத்தில் உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கும். மேலும் ஆரஞ்சு பழச்சாற்றினை சருமத்தில் தடவினால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இதை குளிர் காலத்தில் உட்கொண்டால், சளி பிரச்சனையைத் தடுக்கலாம்.

குளிர்காலத்தில் சளியைத் தடுக்கும் சிறப்பான வழி என்றால், அது ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது தான். ஏனெனில், இப்பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்கும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் கிரேப் புரூட்டை உட்கொள்வதால் பக்கவாதத்தின் அபாயம் குறையும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள, இதய நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாக நம்பப்படுகிறது என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மூலமாக சயின்ஸ் டெய்லியில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பழம் இரத்த நாளங்களின் செயல்பாடு மற்றும் உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்தும்.

சிறுநீரக கற்கள் அபாயம் குறையும்

சிட்ரேட் என்பது சிட்ரிக் அமிலம். இது சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் காணப்படும். சிறுநீரில் சிட்ரேட் குறைபாடு ஏற்பட்டால் சிறுநீரக கற்கள் ஏற்படும்.

பொதுவாக சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கொண்ட நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மருந்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

Web Title:

Kamala orange benefits during winter season

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close