Advertisment

புனித நீராடுவதற்கு ரோஜா இதழ் மழை முதல் ஹெலிகாப்டர் சவாரி வரை; மகா கும்பம் முழு ஏற்பாடுகள் இங்கே

மகா கும்பம் 2025: ஒன்றரை மாதங்களில் 45 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பு; கூட்டத்தை நிர்வாகிக்கும் பொறுப்பைக் கையிலெடுத்த ஐ.ஐ.டி கான்பூர்; ஏற்பாடுகளின் முழு விபரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maha kumbh

மகா கும்பம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் பிரயாக்ராஜில் கூடுகிறார்கள். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தா)

Maulshree Seth

Advertisment

மகா கும்பம் 2025, ஒன்றரை மாதங்களில் 45 கோடி மக்களை பிரயாக்ராஜுக்கு அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மகா கும்பம் திங்கட்கிழமை முதல் ஸ்நானம் அல்லது புனித நீராடலுடன் தொடங்கும்.

ஆங்கிலத்தில் படிக்க: Petal shower to chopper ride to holy dip, stage set for start of Maha Kumbh today

கும்பம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே, சங்கம் எனப்படும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சந்திக்கும் இடம் யாத்ரீகர்களின் பெரும் கூட்டத்தைக் கண்டது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை பிரயாக்ராஜில் உள்ள சங்கத்தில் சுமார் 50 லட்சம் பேர் புனித நீராடினார்கள்.

Advertisment
Advertisement

உத்தரப் பிரதேச அரசின் தோட்டக்கலைத் துறை திங்கள்கிழமை முதல் அனைத்து முக்கிய ஸ்நான நாட்களிலும் பக்தர்கள் மீது மலர் இதழ்களைப் பொழிவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக 20 குவிண்டால் ரோஜா இதழ்கள் பயன்படுத்தப்படும் என்றும், 4,000 ஹெக்டேர் பரப்பளவில் மழை பெய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பத்தை காண திங்கள்கிழமை முதல் சிறப்பு ஹெலிகாப்டர் பயணம் தொடங்கும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.1,296.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கும்பத்தில் பங்கேற்கும் 13 அகாராக்களும் தங்கள் ஊர்வலங்களுடன் கும்பம் தளத்திற்குள் நுழைந்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - தீரஜ் மிஸ்ரா)

கும்பத்திற்காக பிரயாக்ராஜுக்கு பார்வையாளர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ளனர். அவர்களில் ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ்-ம் உள்ளார்.

ஐந்து முக்கிய ஸ்நானம் திங்கட்கிழமை பௌஷ் பூர்ணிமாவில் தொடங்கும், அதைத் தொடர்ந்து ஷாஹி அல்லது அம்ரித் ஸ்நானம் என்று அழைக்கப்படும் மூன்று சடங்குகள், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) மகர சங்கராந்தி அன்றும், ஜனவரி 29 அன்று மௌனி அமாவாசை அன்றும் மற்றும் பிப்ரவரி 3 அன்று பசந்த பஞ்சமி அன்றும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, மீதமுள்ள பெரிய ஸ்நானம் பிப்ரவரி 12 ஆம் தேதி மாக் பூர்ணிமா அன்றும், கடைசியாக மஹா சிவராத்திரி, அதாவது பிப்ரவரி 26 அன்றும் நடைபெறும். 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பம் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தா)

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொடியேற்றப்பட்ட 700 படகுகளில் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) மற்றும் பி.ஏ.சி (PAC) குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்றும், தொலைதூர உயிர்காக்கும் மிதவைகள் பெரிய அளவில் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேச அரசு இந்த மாபெரும் நிகழ்விற்கான தயாரிப்புகளில் ஒன்றாக, இணையப் பாதுகாப்பை வழங்குவதற்கும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்து மேலாண்மைக்கும் உதவுவதற்காக ஐ.ஐ.டி கான்பூரில் இருந்து நிபுணர்களை வரவழைத்தது.

45 நாள் மேளாவின் போது கிட்டத்தட்ட 40 கோடி யாத்ரீகர்களின் வருகைக்கு பிரயாக்ராஜ் தயாராகி வரும் நிலையில், நகரம் முழுவதுமாக மாற்றியமைக்கப்படுகிறது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - தீரஜ் மிஸ்ரா)

கடந்த 12 ஆண்டுகளில் டிஜிட்டல் தளம் கணிசமாக மாறிவிட்ட நிலையில், இந்த முறை மகா கும்பம் தொடர்பாக சமூக ஊடக வதந்திகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து ஒரு பெரிய அச்சுறுத்தலை மாநில அரசு எதிர்பார்க்கிறது.

பாதுகாப்பு அல்லது கூட்ட நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சமூக ஊடக பதிவுகள் குறித்து கும்பமேளா அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை உடனடியாக எச்சரிப்பதற்கான ஒரு பொறிமுறையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையையும் மாநில அரசு நிறுவியுள்ளது.

ஸ்ரீ தபோநிதி ஆனந்த அகாரா பஞ்சாயத்தின் சாதுக்கள் பிரயாக்ராஜில் ‘பேஷ்வாய்’ ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். (பி.டி.ஐ/ கோப்பு படம்)Caption

மேலும், இந்த ஆண்டு மகா கும்பத்தை "டிஜிட்டல் கும்பம்" என்று அரசாங்கம் அறிவித்துள்ளதால், பார்வையாளர்களுக்கு உதவ குறைந்தபட்சம் ஒன்பது வெவ்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் தொடங்கப்பட்டுள்ளன மற்றும் காவல்துறையினரின் பணியமர்த்தல் தொடர்பான பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன, ஹேக்கிங் அச்சுறுத்தலுக்கு இந்த அனைத்து டிஜிட்டல் போர்டல்களையும் ஸ்கேன் செய்ய ஐ.ஐ.டி.,யின் உதவியும் நாடப்பட்டுள்ளது. கும்பம் தளத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து சென்சார்கள் மற்றும் ஸ்கேனர்களையும் கண்காணிக்குமாறு ஐ.ஐ.டி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தவா)

இந்த பயன்பாடுகள் தொடர்பான சேவைகளுக்கான போலி இணைப்புகளை வழங்கும் மோசடி செய்பவர்களுக்கு யாத்ரீகர்கள் இரையாவார்கள் என்ற அச்சமும் உள்ளது, மேலும் இதைத் தடுக்க ஐ.ஐ.டி நிபுணர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐ.ஐ.டி கான்பூர் இயக்குநர் மனீந்திர அகர்வால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “இதுபோன்ற எந்த ஒரு பெரிய நிகழ்வில், வதந்திகள் பரவ ஆரம்பித்தால், அது விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று சமூக ஊடகங்கள் வகிக்கும் பெரிய பங்கைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களில் இதுபோன்ற சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளை அமைப்பதில் நாங்கள் உதவியுள்ளோம். மஹா கும்பம் மற்றும் பிரயாக்ராஜ் தொடர்பான பதிவுகள் அல்லது ஹேஷ்டேக்குகளுக்காக முக்கிய சமூக ஊடக தளங்கள் கண்காணிக்கப்படும் மற்றும் அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சந்தேகிக்கப்படும் விஷயங்கள் குறித்து கும்பமேளா அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கைகள் வழங்கப்படும்,” என்று கூறினார்.

ஆதாரங்களின்படி, தவறான தகவல்களின் சுழற்சியால் ஏற்படக்கூடிய நெரிசல் போன்ற சூழ்நிலைகளைத் தடுப்பதே முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதற்காக, உண்மைச் சரிபார்ப்பு மட்டுமின்றி, மூலத்தில் இருந்தே இதுபோன்ற தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

(எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தவா)

ஐ.ஐ.டி கான்பூரில் ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது, அங்கு சாத்தியமான மோசடிகள் மற்றும் ஹேக்கிங்கிற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சமூக ஊடகங்கள் மற்றும் கும்பம் தொடர்பான பயன்பாடுகளை நிபுணர்கள் கண்காணிப்பார்கள் என்று அகர்வால் கூறினார்.

“நாங்கள் இணையப் பாதுகாப்பிலும் உதவி செய்து வருகிறோம். இந்த ஆண்டு ‘டிஜிட்டல் கும்பம்’ என்று கருதி, டிஜிட்டல் தாக்குதலில் இருந்து அதைத் தடுக்க, கும்பலின் டிஜிட்டல் நெட்வொர்க் செயலிழந்து போகாமல் இருக்கவும், முக்கியமான தகவல்கள் கசிந்து விடாமல் இருக்கவும், சிஸ்டம் செயல்பாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் உள்ளனர். எந்தவொரு சாத்தியமான பலவீனங்களுக்கும் குழுக்கள் தொடர்ந்து பல பயன்பாடுகளைச் சரிபார்க்கின்றன. ஏற்கனவே இரண்டு சுற்று பகுப்பாய்வுகள் நடந்துள்ளன,” என்று அகர்வால் கூறினார்.

பிரயாக்ராஜில் மஹா கும்பத்திற்காக ஆயத்தமான கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தா)

மஹா கும்பத்தின் இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளைத் தவிர, அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்போட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் கும்பமேளா வரைபடத்தை கூகுள் (Google) வரைபடத்துடன் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்காக "க்யூ.ஆர் (QR) அடிப்படையிலான பாஸ் மேலாண்மை அமைப்பை" உருவாக்கியுள்ளது.

தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கிடைக்கும் நிகழ்நேர காட்சிகளை ஸ்கேன் செய்து முடிவெடுப்பதில் உதவுவதன் மூலமும் போக்குவரத்து மற்றும் கூட்ட மேலாண்மைக்கு ஐ.ஐ.டி உதவுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

”அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருவதைக் கருத்தில் கொண்டு, ரயில் இயக்கத்தை நிர்வகிப்பது சவாலாக உள்ளது. எனவே, கேமரா தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ரயில்வே ஸ்டேஷன் அல்லது வேறு எந்தப் பகுதியிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவது குறித்து முன்கூட்டியே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கக்கூடிய முன்கணிப்பு மாதிரியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்,” என்று அகர்வால் கூறினார்.

கும்பமேளா நடைபெறும் இடங்களில் 2,750 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, கூட்டத்தைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவில் இயங்கும் “வீடியோ அனலிட்டிக்ஸ்” அமைப்பிற்கான 268 அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 240 அமைப்புகள் மேளாவிற்கு வரும் வாகனங்களைக் கணக்கிடுவதற்கு அமைக்கப்பட்டுள்ளன. நேரலை தகவல்களை 24 மணி நேரமும் பார்ப்பதற்காக களத்தில் கண்காணிப்பு மையங்களும் உள்ளன.

ஐ.ஐ.டி கான்பூர், மகா கும்பம் 2025 இன் ஒட்டுமொத்த ஆய்வை நடத்தி, மெகா நிகழ்வின் மேலாண்மை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது, இது போன்ற எதிர்கால கூட்டங்களை நிர்வகிக்கும் போது என்ன வேலை செய்தது மற்றும் மேம்படுத்தப்பட வேண்டியவை ஆகியவை அடங்கும். இந்த அறிக்கை நிகழ்வின் முழு காலத்திற்குமான நடவடிக்கைகளைக் கண்காணித்த பிறகு தொகுக்கப்படும்.

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment