குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய பரப்புரை ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற பரப்புரையை ஆம் ஆத்மி பஞ்சாப்பில் மேற்கொண்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை (அக்.29) குஜராத்தின் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்தார்.
மேலும் முதல்வர் வேட்பாளர்களுக்கான பெயர்களுக்கான பரிந்துரைகளை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், குரல் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, வெற்றியாளர் அல்லது கட்சியின் முதல்வர் வேட்பாளர் நவம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். மேலும், “பஞ்சாப் தேர்தலின் போது, அடுத்த முதல்வர் யார் என்று மக்களிடம் கேட்டோம். மக்கள் பெரும்பான்மையுடன் பகவந்த் மான் என்று பெயரிட்டனர். பொதுமக்களின் விருப்பத்தின்படி, அவரது பெயரை நாங்கள் அறிவித்தோம்” என்றார்.
தொடர்ந்து கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது. 21,59,437 பதில்களில் 93% பேர் பகவந்த் மான் தேர்வாக இருந்தார்” என்றார்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நவ்ஜோத் சிங்குக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து கெஜ்ரிவால் பேசுகையில், “அவரை முதல்வராக நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் முதல்வர் வேட்பாளர் என்பது மூடிய கதவுகள் கொண்ட அறைக்குள் நடக்கக் கூடாது” என்றார்.
மேலும் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பஞசாப் மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்” எனக் கெஜ்ரிவால் கூறினார்.
இதே பாணியை ஆம் ஆத்மி குஜராத்தில் கடைப்பிடிக்கிறது. குஜராத்தில் இம்முறை முதல் முறையாக ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் முழு மூச்சாக களம் இறங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil