அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவமனையில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட புதிய மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், 2022இல் அமெரிக்கா செய்ததை, 1997ஆண் ஆண்டிலேயே செய்து காட்டியதாக அசாமை சேர்ந்த மருத்துவர் தானி ராம் பருவா கூறியுள்ளார்.
72 வயதாகும் டாக்டர் பருவா, 1997 ஆம் ஆண்டில் xenotransplantation (உறுப்புகளை ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றுதல்) அறுவை சிகிச்சை செய்து, 32 வயதான ஒருவருக்கு பன்றியின் இதயம் மற்றும் நுரையீரலை மாற்றிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார்.
சோனாபூரில் உள்ள அவரது கிளினிக்கில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் பலனாக, 32 வயதான அவர் பல நோய்த்தொற்று பாதிப்பால் இறப்பதற்கு முன்பு ஏழு நாட்கள் வரை உயிர் பிழைக்க முடிந்ததாக கூறப்படுகிறது.இந்த மாற்று அறுவை சிகிச்சை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்திய அசாமின் அப்போதைய அசோம் கண பரிஷத் அரசாங்கம், அறுவை சிகிச்சையில் உதவிய சைகியா மற்றும் ஹாங்காங் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜொனாதன் ஹோ கீ-ஷிங்கை கைது செய்ய உத்தரவிட்டது.
தொடர்ந்து, மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் நெறிமுறையற்ற நடைமுறை மற்றும் மரணம் விளைவிக்கும் குற்றத்திற்காக, பருவா மற்றும் ஹோ கீ-ஷிங் ஆகிய இருவரும் 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சோனாபூரில் உள்ள தானி ராம் பருவா ஹார்ட் இன்ஸ்டிடியூட் & ரிசர்ச் சென்டரில் பருவாவுடன் நீண்டகாலம் பணியாற்றும் சக ஆராய்ச்சியாளர் டாலிமி பாருவா பேசுகையில், " அவர் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். மேரிலாந்தின் வளர்ச்சியை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது சாருக்கு ஒன்றும் புதுசு கிடையாது. அவர் 1997இல் செய்துகாட்டியது தான். எனவே, இதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தைத் தொடர்ந்து மூளை அறுவை சிகிச்சை மற்றும் ட்ரக்கியோஸ்டமி செய்த தில், அவரது பேசும் திறன் பாதிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். 1997 இல் அவர் செய்த அதே நடைமுறை மற்றும் திட்டத்தை அமெரிக்க மருத்துவர்கள் தற்போது பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறினார். பன்றி உறுப்புகளை மனிதர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, அவரது மருத்துவமனை முழுவதும் எரிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது முயற்சிக்கு தகுதியான மரியாதை கிடைக்கவில்லை என வருத்தப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக புதிய ஆராய்ச்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் மனிதர்கள் நோயின்றி வாழ முடியும்" என தெரிவித்தார்.
விமர்சர்கள் கூற்றுப்படி," பருவாவின் கூற்றுக்கள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, விஞ்ஞான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏனென்றால், அவர் தனது கண்டுபிடிப்புகளை விஞ்ஞான ரீதியாக மதிப்பாய்வு செய்யவில்லை என கூறுகின்றனர்.
2019 ஆம் ஆண்டில் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த மின்னஞ்சல் நேர்காணலில், இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் தனது குழு ஒரு பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலில் மாற்றுவதாக அறிவித்ததை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தனது முன்னேற்றம் சர்வதேச சகோதரத்துவத்தால் அடக்கப்பட்டது. இது புதிய பாட்டிலில் நிரப்பப்பட்ட அதே பழைய ஒயின் தான். இதை நான் 24 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil