Antarctica: 1984 ஆம் ஆண்டில், அண்டார்டிகாவிற்கு இந்தியாவின் முதல் பயணத்திற்குப் பிறகு, பனிக்கட்டியால் சூழந்த அந்த கண்டத்தில் அதன் முதல் தபால் அலுவலகம் தக்ஷி கங்கோத்ரி என்கிற இடத்தில் அமைக்கப்பட்டது. இங்கு தான் நாட்டின் முதல் அறிவியல் ஆராச்சி நிலையம் உள்ளது. முதல் வருடத்திற்குள், 10,000 கடிதங்கள் மற்றும் அஞ்சல்கள் பதிவு செய்யப்பட்டு, அஞ்சல் அலுவலகத்தில் 'ரத்து' செய்யப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pin code MH-1718: In Antarctica, a post office with Indian address
இதனை, இந்தியாவின் தபால் சகோதரத்துவத்திற்கான ஒரு "தனித்துவமான பரிசோதனை" என்று அதிகாரிகள் விவரிக்க ஆரம்பித்தனர். தக்ஷின் கங்கோத்ரி 1988-89 இல் பனியில் மூழ்கிய நிலையில், தபால் அலுவலகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, ஜனவரி 26, 1990 அன்று, அண்டார்டிகாவில் உள்ள இந்தியாவின் மைத்ரி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு தபால் அலுவலகக் கிளை அமைக்கப்பட்டது.
அப்போதிருந்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்று உறைகளில் உள்ள கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் - பெரும்பாலும் தபால்தலைவர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆர்வலர்களால், மைத்ரி தபால் நிலையத்திற்கு 'ரத்துசெய்வதற்காக' அனுப்பப்படுகின்றன.
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்டார்டிகாவிற்கான அனுப்பப்பட கடிதங்களுக்கு இப்போது MH-1718 என்ற புதிய பின்கோடு நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் அஞ்சல் அலுவலகத்தின் இரண்டாவது கிளையை அஞ்சல் துறை திறக்கிறது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பின்கோடு "பரிசோதனை" ஆகும். இது ஒரு புதிய கிளை தொடங்கும் போது வழக்கமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“நடைமுறையில், அண்டார்டிகாவில் உள்ள தபால் நிலையத்திற்கான கடிதங்கள் கோவாவில் உள்ள இந்தியாவின் துருவப் பயணங்களுக்கான நோடல் ஏஜென்சியான துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்திற்கு (என்.சி.பி.ஓ.ஆர் - NCPOR) அனுப்பப்படுகின்றன. NCPOR இலிருந்து கண்டத்திற்கு ஒரு அறிவியல் பயணம் புறப்படும்போது, ஒரு ஆராய்ச்சியாளர் வழக்கமாக கடிதங்களின் சரக்குகளை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறார். ஆராய்ச்சி தளத்தில், கடிதங்கள் 'ரத்து' செய்யப்பட்டு, மீண்டும் கொண்டு வரப்பட்டு, தபால் மூலம் திருப்பி அனுப்பப்படுகின்றன, "என்று அஞ்சல் துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
‘ரத்துசெய்தல்’ என்பது தபால்தலை அல்லது எழுதுபொருள்களில் முத்திரையை சிதைத்து மீண்டும் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் குறிக்கப்படுவது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக, 'ரத்துசெய்யப்பட்ட' கடிதங்களில் முத்திரைகள் அஞ்சல் செய்யப்பட்ட தேதி மற்றும் தபால் நிலைய இடம் ஆகியவை அடங்கும். சேகரிப்பாளர்களுக்கு, முத்திரைகளின் மதிப்பை தீர்மானிக்க அவை முக்கியமானவை.
என்.சி.பி.ஓ.ஆர்., முன்னாள் விஞ்ஞானி எம்.சுதாகர், தபால் அலுவலகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கான மற்றொரு காரணத்தை விளக்கினார். அண்டார்டிகா அட்லாண்டிக் உடன்படிக்கையால் நிர்வகிக்கப்படுகிறது. இது எந்தவொரு நாட்டினதும் பிராந்திய உரிமைகோரல்களை ஒதுக்கி வைக்கிறது. மேலும் ராணுவ நடவடிக்கை அல்லது அணுசக்தி சோதனைகளை தடை செய்கிறது மற்றும் கண்டத்தை அறிவியல் ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“பொதுவாக, ஒரு இந்திய தபால் அலுவலகம் இந்திய நிலத்தின் அதிகார வரம்பில் மட்டுமே இருக்க முடியும். அண்டார்டிகா, நமக்குச் சொந்தமில்லாத வெளிநாட்டில் இந்திய தபால் நிலையத்தை வைத்திருக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, கண்டத்தில் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் இது ஒரு மூலோபாய நோக்கத்திற்கு உதவுகிறது, ”என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்த, மகாராஷ்டிரா வட்டத்தின் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல், கே.கே.சர்மா, அண்டார்டிகாவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கடிதங்களைத் தொடர்ந்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.
"இந்த தபால் நிலையங்களில் (தொலைதூர இடங்களில்) எப்போதும் மிகுந்த உற்சாகம் இருக்கும். இப்போதெல்லாம் வாட்ஸ்அப், ட்விட்டர் இவையெல்லாம் (தொழில்நுட்பம்) ஆக்கிரமித்துள்ளன. ஆனால், எழுதப்பட்ட வார்த்தையை எதுவும் வெல்ல முடியாது. குறிப்பாக, நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் அமர்ந்திருக்கும் போது. இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு கடிதங்கள் எழுதுங்கள்... நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம், அவர்கள் உடல் வடிவில் உங்களுடன் இருப்பார்கள். இந்த மின் வடிவங்கள் அனைத்தும் விரைவாக அழிக்கப்படும், ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஒரு கடிதத்தைப் பார்க்கலாம், அது உங்களை அந்த நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்" என்று சர்மா கூறினார்.
அண்டார்டிகாவில் உள்ள இந்தியாவின் தபால் அலுவலகக் கிளைகளுக்கான பெரும்பாலான அஞ்சல்கள் தபால்தலை ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்களால் இயக்கப்படுகின்றன. கோவா பிராந்தியத்தின் அஞ்சல் சேவைகள் இயக்குநர் ஆர்.பி. பாட்டீல் கூறுகையில், “தபால்தலை சேகரிப்பாளர்கள் தொலைதூர அஞ்சல் அலுவலக இடத்திலிருந்து முத்திரையின் ‘இம்ப்ரெஷனை’ சேகரிக்கும் அரிய வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். கடிதங்களை ரத்து செய்ய தபால்தலைவர்களிடமிருந்து எப்போதும் அதிக தேவை உள்ளது.
என்.சி.பி.ஓ.ஆர் கோவாவின் இயக்குநர் டாக்டர் தம்பன் மெலோத் கூறுகையில், “அண்டார்டிகாவுக்குச் செல்லும் எவருக்கும் அஞ்சல் முத்திரையைப் பெறுவது ஒரு அனுபவம். தபால்தலை சமூகத்தினரிடையே இவற்றுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.