”நான் நலம், எனக்கு எந்தவித உடல்நல பிரச்சனைகளும் இல்லை”: பினராயி விளக்கம்

தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு எந்தவித உடல்நல பிரச்சனைகளும் இல்லை எனவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு எந்தவித உடல்நல பிரச்சனைகளும் இல்லை எனவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைகள் அதனைத்தொடர்ந்து சிகிச்சை முடிவடைந்து மறுநாளே அவர் கேரள விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றாலும், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவின. இந்நிலையில், சென்னையிலிருந்து கேரளா திரும்பிய பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தன் உடல் நிலை குறித்து கூறினார். அப்போது, “நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு எந்தவித உடல் நல பிரச்சனைகளும் இல்லை. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். கடந்த 15 ஆண்டுகளாக இத்தகைய பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றேன்.”, என தெரிவித்தார்.

மேலும், “என்னுடைய உடல் நிலை குறித்து சிலர் வதந்தியை பரப்புகின்றனர்”, எனவும் அவர் குறிப்பிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close