அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மீதான கேவலமான தாக்குதலை நிறுத்துக என்று முழக்கம் எழுப்பினார்.
இதனைக் கேட்ட பாஜக எம்பிக்கள் குரல் எழுப்பிய நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர் குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னாள் அரசு ஊழியரிடம், நமது செய்தியாளர் நிகிலா ஹென்றி பேசினார்.
ஏன் இந்த கோஷம் எழுப்பினீர்கள்?
கடந்த பத்து வருடங்களாக மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அரசாங்கம் வன்முறையை ஏவி வருகிறது. இதுபோன்ற அரசியலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
நீங்கள் எந்த மாதிரியான அரசியலைக் குறிப்பிடுகிறீர்கள்?
தேர்தலில் வெற்றி தோல்வி ஒன்றுதான், ஆனால் மக்களுக்கு எதிராக மக்களை மோதவிடுவது நல்லாட்சி அல்ல. இது அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது.
அரசாங்கம் நிறுத்த வேண்டிய சில விஷயங்களை சொல்ல முடியுமா?
மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை அரசு நிறுத்த வேண்டும். அது நீதியல்ல. ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளின் வாழ்க்கை முறையை மாற்றுவதை நிறுத்த வேண்டும்.
என்றாலும் சத்தியப்பிரமாணத்தின் போது ஏன் கோஷம் எழுப்ப வேண்டும்?
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாம் சத்தியப்பிரமாணம் செய்யும்போது, வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று அர்த்தம். எனவே அந்த முழக்கம் அந்த நேரத்தில் பொருத்தமாக இருந்தது.
இந்த கொடுமைகளை நிறுத்த என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
எம்.பி.யாக நான் பாதிக்கப்படக்கூடிய மக்களுடன் நிற்பேன். கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவேன். அரசமைப்புச் சட்டத்தின்படி நிற்பேன்’ என்று எம்.பி. சசிகாந்த் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“