Piyush Goyal Announces New Railway recruitment : அடுத்து வரும் இரண்டு வருடங்களில், இந்திய ரயில்வே துறையில் 2.3 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 23,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Piyush Goyal Announces New Railway recruitment
தற்போது 1.5 லட்சம் நபர்களுக்கான வேலை வாய்ப்புத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவர் உறுதிபடுத்தினார். அடுத்த இரண்டு வருடங்களில், ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெறுபவர்களால் ஒரு லட்சம் புதிய வேலை வாய்ப்புகளும் அடுத்த வருடம் உருவாகும்.
தற்போது உருவாக்கப்பட்டு வரும் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள், முடிவுகள், மற்றும் இதர நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. அடுத்த நிதியாண்டில், இவர்களுக்கான சம்பளம் தருவதால் நிதி பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம்.
பலர் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை குறிவைத்து இந்த திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது பாஜக அரசு என்று குற்றம்சாட்டி வருகின்றார்கள்.
மேலும் படிக்க : யார் சொன்னது என்ஜீனியரிங்க் படித்தால் வேலை கிடைக்காது என்று ? ரயில்வேயில் புதிய வேலை வாய்ப்புகள்