பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா... பீதியில் தெற்கு டெல்லி!

அந்நபர் பீட்சா டெலிவரி செய்த 72 குடும்பங்களில் வசிக்கும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Pizza delivery agent infected with coronavirus 72 South Delhi families quarantined : தெற்கு டெல்லியில் அமைந்திருக்கும் மால்வியா நகரில் இயங்கி வருகிறது பிரபலமான பீட்சா நிறுவனம். அங்கு வேலை செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது செவ்வாய் கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடன் வேலை செய்த 16 நபர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெற்கு டெல்லி மாவட்டாஅட்சியர் மிஸ்ரா கூறியுள்ளார்.

மேலும் அந்நபர் பீட்சா டெலிவரி செய்த 72 குடும்பங்களில் வசிக்கும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரித்த மாவட்ட ஆட்சியர் “ அந்நபர் பீட்சா டெலிவரி செய்த ஆனைத்து வீடுகளையும் அடையாளப்படுத்தும் பணி உடனே துவங்கப்பட்டது. அவர் டெலிவரி செய்த 72 வீடுகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஏன் என்றால் உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்கு முகக்கவசம் அணிய ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம். அதனால் பயப்பட ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : லாக்டவுன் கால சமையல் : இரவு நேரத்தில் குறுமிளகு பால் குடியுங்கள் – செஃப் தாமு

தற்போது அந்த பீட்சா டெலிவரி செய்யும் நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close