Pizza Hut offering free pizza to anyone named Abhinandan : தற்போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தான் இந்தியாவின் ஹாட் டாபிக். அவரின் மீசை முதற்கொண்டு அனைத்தும் ட்ரெண்டாகி வர, இதனை வைத்து அபிநந்தன் என்று பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கியது பீட்சா ஹட் நிறுவனம்.
அபிநந்தன் என்ற பெயர் வைத்தவர்களுக்கு இலவச பீட்சா வழங்கும் சலுகை ஒன்றை அறிமுகம் செய்து வைத்தது பீட்சா ஹட் உணவகம். இது தொடர்பாக தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டலில் பதிவு ஒன்றை வெளியிட்டது அந்நிறுவனம்.
Pizza Hut offering free pizza to anyone named Abhinandan
”அபிநந்தனை கௌரவிக்கும் வகையிலும், அவருடைய துணிவு மிக்க செயலுக்கு நன்றி கூறும் வகையிலும், அபிநந்தன் என்ற பெயர் வைத்தவர்களுக்கு இலவச பீட்சா வழங்குகின்றோம்” என்ற ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவியது.
மேலும் படிக்க : அருவா மீசையுடன் சுற்றும் ஆண்கள்… அபினந்தனின் மீசை டிரெண்டாக என்ன காரணம்?
இந்த பதிவிற்கு ஒரு சாரர் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் பலர், அபிநந்தன் பெயரை வைத்து விளம்பரம் செய்ததிற்காக பீட்சா ஹட்டை விமர்சித்தும் தங்களின் பதிவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.