அவர்களில் பெரும்பாலான பயணிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், சிறிய அளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Faces covered, unwilling to speak, 280 passengers on plane grounded in France land in Mumbai
முகத்தை மூடிக்கொண்டு, சிலர் மொபைல் போன்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சி செய்தார்கள். அவர்கள் தங்களின் தவறான செயல்களைப் பற்றி பேச விரும்பவில்லை - 280-க்கும் மேற்பட்ட பயணிகள் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலையில் தரையிறங்கிய ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு வெளியேறினர்.
பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் ஏ340 விமானம் ஆள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பிரான்சில் 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இன்று மும்பைக்கு வந்து தரையிறங்கியது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ருமேனியாவை தளமாகக் கொண்ட கேரியர் லெஜண்ட் ஏர்லைன்ஸ் எந்த விமானத்தையும் அங்கிருந்து மும்பைக்கு இயக்காததால் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம் விமானம் அனுப்பப்பட்டது.
அதிகாலை 3.30 மணியளவில் விமானம் தரையிறங்கியது, அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பில் பயணிகள் இறங்கினர். குடிவரவுத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) அதிகாரிகளால் நடத்தப்பட்ட கடுமையான விசாரணைகளைத் தொடர்ந்து, காலை 8.30 மணிக்குப் பிறகுதான் அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், அவர்களி குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் முகமூடிகள் அணிந்தும் மற்றும் கைக்குட்டைகளால் முகத்தை மூடிக்கொண்டும்m வெளியே வருவதைக் காண முடிந்தது, மேலும், அவர்கள் ஊடகங்களுடன் பேசுவதைத் தவிர்த்தனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இரண்டு வருகை லாபிகள் (பி4 மற்றும் பி6) வழியாக பயணிகள் வெளியேறினர், அவர்களில் சிலர் போக்குவரத்து பேருந்து மூலம் உள்நாட்டு விமான நிலைய முனையத்தை நோக்கி சென்றனர்.
கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் லெஜண்ட் ஏர்லைன்ஸின் வெள்ளை ஸ்டிக்கர்களுடன் இரண்டு சாமான்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர். மேலும், அவர்களின் செக்-இன் சாமான்களில் வழக்கமான ‘பேக் டேக்’ காணவில்லை என்பதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டுபிடித்தது.
பயணிகள் தங்கள் பயண அனுபவத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தனர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர்களை அணுகியபோது அவர்களில் கோபம் அடைந்தனர்.
பஞ்சாபைச் சேர்ந்த பயணிகளில் ஒருவர், தங்கள் சொந்த செலவில் சொந்த மாநிலத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார். மற்ற விவரங்களை பயணிகள் தெரிவிக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/d8z98HXa8jOEaSPIplIC.jpg)
மும்பை விமான நிலையத்தில் அதிகாலை 3.30 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பில் பயணிகள் இறங்கினர். (பிரதீப் தாஸின் எக்ஸ்பிரஸ் புகைப்படம்)
ஏர்பஸ் யுனைடெட் அரேபிய எமிரேட்ஸ் (UAE)-ல் இருந்து புறப்பட்டு, டிசம்பர் 22-ம் தேதி நிகரகுவாவுக்குச் சென்றது. சிறார்கள் உள்பட 303 இந்தியப் பயணிகளுடன், கிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் உள்ள வேட்ரி (Vatry) விமான நிலையத்தில், ஏர்பஸ் விமானம் ஒரு தொழில்நுட்ப நிறுத்தத்தில் இருந்தது. உள்ளூர் பிரெஞ்சு நிர்வாகத்திற்கு 'மனித கடத்தல்' பற்றிய அநாமதேய தகவல் கிடைத்ததை அடுத்து, வாட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு, பிரான்ஸ் அதிகாரிகள் அனைத்து பயணிகளின் பயணத்தின் நிபந்தனைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து நீதி விசாரணையை தொடங்கினர். பிரான்ஸ் அரசாங்கத்தின் கருத்துப்படி, பயணிகள் நிகரகுவாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கிருந்து அவர்கள் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் சட்டவிரோதமாக நுழைந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நீதிபதிகள் கொண்ட குழு விமானப் பயணிகளிடம் கேள்வி எழுப்பியதால், நீதிமன்ற விசாரணை நடைமுறை வேட்ரி விமான நிலையத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது, பல பயணிகள் பிரான்சில் தஞ்சம் கோரியதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பதினொரு பயணிகள் துணையில்லாத சிறார்களாக இருந்தனர், அவர்கள் சிறப்பு நிர்வாக கவனிப்பில் வைக்கப்பட்டனர்.
பிரெஞ்சு சட்டத்தின்படி, வெளிநாட்டினரை நான்கு நாட்கள் வரை போக்குவரத்து மண்டலத்தில் போலீஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கலாம்.
டிசம்பர் 24-ம் தேதி விமானத்தின் மீதான பறிமுதல் உத்தரவு நீக்கப்பட்டது. டிசம்பர் 25-ம் தேதி ஏர்பஸ் மீண்டும் பறக்க அனுமதிக்கப்பட்டது. அந்த விமானம் டிசம்பர் 26-ம் தேதி மும்பை வந்தடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“