Advertisment

பிளாஸ்மா சிகிச்சையால் முன்னேற்றம் இல்லை: ஐ.சி.எம்.ஆர் ஆய்வறிக்கை

தானம் தரப்பட்ட ரத்தத்தில் இருந்து இரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் ஆண்ட்டிபாடிகள் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

author-image
WebDesk
New Update
பிளாஸ்மா சிகிச்சையால் முன்னேற்றம் இல்லை: ஐ.சி.எம்.ஆர் ஆய்வறிக்கை

 Anuradha Mascarenhas

Advertisment

கன்வெலசென்ட் பிளாஸ்மா, கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கவோ, கடுமையான கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுத்து நிறுத்தவோ உதவவில்லை என்று தெரியவந்துள்ளது. சுகாதார அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான முன்சேவை மையமாக செயல்பட்டு வரும் மெட்ஆர்க்ஸிவில் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது ஐ.சி.எம்.ஆர் இந்த ஆய்வினை மறுபரிசீலனை செய்யவில்லை என்றும், ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை என்றும் கூறினர்.

கோவிட் -19 க்கான சிகிச்சை முறையாக கான்வெலெசெண்ட் பிளாஸ்மாவைப் பயன்படுத்துவதற்காக இந்தியாவில் ஆஃப்-லேபிள் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும், ஐ.சி.எம்.ஆரின் பிளாசிட் சோதனையின் நோக்கம் கோவிட் -19 சிகிச்சைக்கான அதன் செயல்திறனை ஆராய்வதாகும். 28 நாட்களில் தேவையான சிகிச்சைகளுடன் கான்வலெசெண்ட் சிகிச்சை பெற்ற மிதமாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இறப்பை குறைக்கவோ, நோயின் கடுமையான எல்லைக்கு செல்வதை தடுக்கவோ இல்லை என்று ப்ளாசிட் சோதனை முடிவுகள் அறிவிக்கின்றன.

To read this article in English

நோய்தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்தவர்களின் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா செல்கள் பிரித்து எடுக்கப்பட்டு நோயால் அவதியுறும் நபர்கள் நோயில் இருந்து மீள தரப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடம்பில் அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி இருக்கும். அந்த தானம் தரப்பட்ட ரத்தத்தில் இருந்து இரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் ஆண்ட்டிபாடிகள் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும். இந்த பிளாஸ்மா கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களின் உடம்பில் செலுத்தப்பட்டு நோய்க்கு எதிராக போராட தூண்டப்படும்.  ஐ.சி.எம்.ஆர். பிளாஸ்மா குறித்த ஆய்வு, பிளாசிட், உலகின் முதல் மற்றும் பெரிய ரேண்டமைஸ்ட் கண்ட்ரோல் ஆராய்ச்சி ஆகும். முடியும் தருவாயில் இருக்கும் இந்த ஆராய்ச்சியை ஏற்கனவே சீனா மற்றும் நெதர்லாந்து மேற்கொண்டது. இருப்பினும் அந்த ஆய்வுகளை முடிக்க இயலவில்லை.

ரேண்டமஸைட் கண்ட்ரோல்ட் இந்தியாவின் க்ளினிக்கல் ட்ரையல் ரெஜிஸ்ட்ரி ஆஃப் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுவதும் உள்ள 39 மருத்துவமனைகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரையில் 464 நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 235 நபர்கள் இண்டெர்வென்சனிலும் 229 நபர்கள் கண்ட்ரோல் ஆர்ம்களிலும் பதிவு செய்தனர். இண்டெர்வென்சனில் 34 நபர்கள் உயிரிழந்தனர். அதே போன்று கண்ட்ரோல் ஆர்மில் 31% பேர் உயிரிழந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சையானது பல்வேறு நாடுகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்த ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment