scorecardresearch

புதுச்சேரி அரசின் தொழில் கொள்கையை விரைவில் அறிவிக்க கோரிக்கை – பிளாஸ்டிக் தொழில் கூட்டமைப்பு

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை உருவாக்க முதலமைச்சர் தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிளாஸ்டிக் தொழில் கூட்டமைப்பினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி அரசின் தொழில் கொள்கையை விரைவில் அறிவிக்க கோரிக்கை – பிளாஸ்டிக் தொழில் கூட்டமைப்பு

புதுச்சேரி அரசின் தொழில் கொள்கையை விரைவில் அறிவித்து செயல்படுத்த வேண்டும், தொழில் தொடங்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு நில ஒதுக்கீடு வழங்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் தொழிற்சாலை தொடங்க ஒற்றை சாரா முறை அனுமதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் தடை இன்றி மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சி விரோதமாக செயல்படும் தொழில் துறை இயக்குநரை மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை உருவாக்க முதலமைச்சர் தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி தொழில் கூட்டமைப்பின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிளாஸ்டிக் தொழில் கூட்டமைப்பின் தலைவர் பாபு கூறுகையில், “புதுச்சேரி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரியில் மாசு இல்லா தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்பதுதான் தொழில் கூட்டமைப்பின் குறிக்கோளாக உள்ளது.ஆனால் தொழில் துறை இயக்குனர் தொழில் துறை பற்றி எந்தவிபுதுச்சேரியில்த அடிப்படை புரிதலும் இல்லாமல் இருக்கிறார். அவர் புதுச்சேரியில் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு கல்லைக் கூட இதுவரை எடுத்துப் போட்டதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் தொழிற் பேட்டைகளில் தடையின்றி மின்சாரம் பெற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்றும் புதிய தொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்க வேண்டும் என்றும் பாபு கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Plastic industry federation petition at puducherry cm rangasamy for declare govts industry policies