பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கும், சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று குறைந்தது ஐந்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் (CECs) இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மேலும், முழு ஆணையத்திற்கும் மிஸ்ராவிற்கும் இடையேயான முறைசாரா விவாதம், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தின் பிம்பத்தை "அழிக்க" கூடியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களான ராஜீவ் குமார் மற்றும் அனுப் சந்திர பாண்டே ஆகியோர், நவம்பர் 16 அன்று PMO உடன் ஆன்லைன் "கலந்துரையாடலில்" இணைந்தது எப்படி என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிப்படுத்திய செய்திக்கான விமர்சனங்கள் இவை.
மிஸ்ரா ஒரு பொதுவான வாக்காளர் பட்டியல் "கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்" என்றும், "CEC" வருவார் என்று எதிர்பார்க்கிறார் என்றும் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அமைச்சகமான சட்ட அமைச்சகத்தின் அதிகாரியிடமிருந்து தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தைப் பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு இந்த விமர்சனங்கள் வந்துள்ளது.
அத்தகைய வார்த்தைகள், முன்னுதாரண மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறும் "அழைப்பு" போல் இருப்பதாக ஒரு அதிகாரி கூறினார்.
இந்த கலந்துரையாடலை "கொடூரமானது" என்று அழைத்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் SY குரைஷி "இது ஏற்றுக்கொள்ள முடியாதது... நீதித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய விவாதத்திற்கு அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் இந்திய தலைமை நீதிபதியையும் அரசாங்கம் அழைக்குமா? இந்த வழக்கில் பொருந்தும் ஒரே ஒப்புமை இதுதான். அப்படியென்றால் ஏன் தேர்தல் கமிஷனை கூட்டத்திற்கு அழைக்க வேண்டும்? பிரதம மந்திரி கூட தலைமை தேர்தல் ஆணையரை கூட்டத்திற்கு அழைக்க முடியாது என்று கூறினார்.
ஜூலை 2010 முதல் ஜூன் 2012 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த குரைஷி மேலும் கூறியதாவது: “தேர்தல் ஆணைய கமிஷனர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே நடக்கும் எந்த சந்திப்பும் சந்தேகத்தை எழுப்பும். எங்கள் அதிகாரிகளுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் தேர்தல் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துபவர்கள். அதிகாரிகள் இந்த நோக்கத்திற்காக துல்லியமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் அரசாங்கத்தின் கூட்டங்களில் ஆணையத்தின் கருத்தை விளக்குவதற்கு வழக்கமாகச் செல்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தால் கோரப்படும் ஒரு உரையாடலில் கமிஷனர்கள் கலந்துகொள்வார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை என்று கூறினார்.
பிப்ரவரி 2004 முதல் ஜூன் 2005 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த TS.கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், “அரசியலமைப்பு அந்தஸ்து தொடர்பாக அதிகாரிகளால் கூட்டப்படும் எந்தக் கூட்டத்திலும் தேர்தல் ஆணையர்கள் கலந்து கொள்ளத் தேவையில்லை என்றுதான் என்னால் கூற முடியும். நிச்சயமாக, அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டால், விளக்கங்களை எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் பெறலாம், ஆணையம் அதற்கான பதில்களை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம். என்றார்.
2018 இல் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஓ.ராவத் கூறுமையில், “நாங்கள் அங்கு இருந்தபோது இது போன்ற ஒரு விஷயம் நடக்கவில்லை. எந்த அமைச்சகமும் ஒரு கூட்டம் பற்றி அறிவித்து, தலைமை தேர்தல் ஆணையரை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவில்லை. உண்மையில், அரசாங்கம் ஒரு கூட்டத்தை நாடினால், அவர்களின் அதிகாரிகள் வந்து கமிஷனர்களுக்கு விவரங்களை விளக்குவார்கள். உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போதைய நிதிச் செயலர் எஸ்.சி.கார்க் வந்தார்... இந்தக் கூட்டங்கள் தேர்தல் ஆணையத்திற்கு வெளியேயோ அல்லது ஆன்லைனிலோ அல்லது ஒரு அரசாங்க அதிகாரியின் தலைமையில் நடத்தப்பட்டதில்லை என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்திற்கு சிக்கல்கள் இருந்தால், "தலைமை தேர்தல் ஆணையர்கள் தொலைபேசியை மூலம், பிரச்சனைகளை சரிசெய்ய அதிகாரிகளிடம் பேசுகிறார்கள்" என்று ராவத் கூறினார். "ஆனால் அது தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சியில் செய்யப்படுகிறது." “மூன்று கமிஷனர்களும் முறையான கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் மூலம் உரிமையை நிறைவேற்றியதாகத் தெரிகிறது. ஆனால் மூன்று கமிஷனர்களும் சந்திப்புக்குப் பிறகு முறைசாரா முறையில் ஆன்லைனில் சந்தித்தால், அது சற்று பொருத்தமற்றதாகத் தெரிகிறது. அவர்கள் எந்த அதிருப்தியையும் தவிர்க்க விரும்பியதாகத் தெரிகிறது. என்று ராவத் கூறினார்.
பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் ஒருவர், கலந்துரையாடல் "100% தவிர்க்கக்கூடியது" என்றார். மேலும், “அரசாங்கக் கூட்டங்களில் முழு தேர்தல் ஆணையக் குழுவையும் கலந்துகொள்ள செய்வதற்கான முயற்சிகள் கடந்த காலத்திலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நாங்கள் இவைகளுக்குச் சென்றதில்லை. அது நடந்திருக்கக் கூடாது” என்று அந்த முன்னாள் தலைவர் கூறினார்.
மற்றொரு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புக்கான நாள் மிக நெருக்கமாக உள்ள நிலையில் அரசாங்கத்துடனான சந்திப்பு கமிஷனுக்கு நல்லதாக இல்லை என்று கூறினார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
"வெளிப்படையாகச் சொன்னால், அத்தகைய சந்திப்புக்குப் பிறகு அரசாங்கமோ அல்லது தேர்தல் ஆணையமோ யாருக்கும் இது நன்றாக இருப்பதில்லை. அவர்கள் சீர்திருத்தங்களைப் பற்றி விவாதித்திருக்கலாம் என்றாலும், எங்களிடம் சில நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளும் நடைமுறைகளும் ஒரு நோக்கத்திற்காக சேவை செய்வதால் அவை நடைமுறையில் உள்ளன. ஆணைக்குழுவின் நடுநிலைமை மற்றும் சுயாதீனம் மற்றும் சுதந்திரம் பற்றிய கருத்து கூட பாதுகாக்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையராக எனது அனுபவத்தில், நீங்கள் உணர்ந்த சுதந்திரத்தில் எந்த குறையும் ஏற்படாமல் உங்கள் முன்மொழிவுகளைப் பெறுவது சாத்தியம்." என்று அவர் கூறினார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் N.கோபாலசாமியிடமிருந்து ஒரு கருத்து வேறுபாடு குறிப்பு வந்தது: "எனக்கு இங்கு எந்த பிரச்சனையும் இல்லை." ஜூன் 2006 முதல் ஏப்ரல் 2009 வரை பதவியில் இருந்த கோபாலசாமி மேலும் கூறியதாவது: “முறையான கூட்டம் மிஸ்ரா தலைமையில் முடிந்து, மூன்று கமிஷனர்களும் தனித்தனியாக முதன்மை செயலாளருடன் தொடர்பு கொண்டால், அவர்களுக்குள் கருத்துக்கள் பகிர்வதைத் தடுக்க எதுவும் இல்லை. ஏனென்றால், சம்பிரதாயமான கூட்டம் முடிந்த பிறகு, உரையாடலுக்கு யாரும் தலைமை தாங்கவில்லை. இது வெறும் கருத்துப் பரிமாற்றம்தான்." என்றார்.
இது தொடர்பாக, சுஷில் சந்திராவிடம் இருந்து கருத்து கிடைக்கவில்லை, ஆனால் ஒரு மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி வியாழன் அன்று, தலைமை தேர்தல் ஆணையர், சட்ட அமைச்சகத்திடம் இருந்து குறிப்பு கிடைத்ததும், சட்ட அமைச்சகத்திற்கு தனது "அதிருப்தியை" உணர்த்தினார் மற்றும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அவரும் மற்ற இரண்டு கமிஷனர்களும் வீடியோ மீட்டிங்கில் இருந்து விலகி இருந்ததனர். ஆனால், அதில் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர். அதற்கு பின்னர், மூவரும் உடனடியாக மிஸ்ராவுடன் "முறைசாரா கலந்துரையாடலில்" இணைந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.