Advertisment

கொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மகள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மகள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதனால், கொரொனா தடுப்பு நடவடிக்கைளுக்காகவும் நிவாரணப் பணிகளுக்காகவும் பல ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதால் மத்திய அரசுக்கு நிதி தேவைப்படுவதால், பொதுமக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் நன்கொடை அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் மனப்பான்மையை மதித்து, அந்த மனப்பான்மையை மதித்து, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு தொடர்ந்து செயல்படும்.

இது இந்திய மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள். அனைவரும் PM-CARES என்பதற்கு தயவுசெய்து நிதி அளியுங்கள். இந்த நிதி வரும் காலங்களில் இது போன்ற பேரிடர் சூழலையில் உதவும்.

கொரோனாவைத் தடுக்க மக்கள் தங்களால் இயன்ற சிறிய தொகையானாலும் அதை நிதியுதவியாக அளிக்கலாம்.

நிதி அளிப்பதற்கான விவரம்:

வங்கிக் கணக்கு பெயர்: PM CARES

கணக்கு எண்: 2121PM20202

IFSC Code: SBIN0000691

SWIFT CODE: SBININBB104

வங்கியின் பெயர் மற்றும் கிளை: State Bank of India, New Delhi Main Branch

UPI ID: pmcares@sbi

மேலும் pmindia.gov.in இணைப்பின் ஊடாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, இணையவழி பணப்பரிமாற்றம், யுபிஐ (பிம், ஃபோன்பே. அமேஸான் பே, கூகுள் பே, பேடிஎம், மொபிக்விக்), RTGS/NEFT மூலமும் நிதியுதவி அளிக்கலாம்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முதல் ஆளாக ரூ.25 கொடி பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “இது எல்லாம் நம்முடைய மக்களின் வாழ்க்கைக்கானது. இந்த தருணத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதையேல்லாம் செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பிலிருந்து ரூ.25 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளேன். மக்களின் வாழ்க்கையைக் காப்போம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்தியாவின் முன்னணி தனியார் தொழில் நிறுவனங்களில் ஒன்றான, டாடா குழுமத்தின் அறக்கட்டளை ரூ.500 கோடி நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

அதோடு, டாடா குழுமம் தனியாக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம், டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் பலரும் குறைந்த பட்சம், ரூ.500 தங்களால் இயன்ற தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நன்கொடையாக அளித்து வருகின்றனர்.

இதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Corona Virus Narendra Modi Tata Akshay Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment