PM Modi Independence Day Speech: நரேந்திர மோடி உரை : இன்று இந்தியா தனது 72வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி தனது சுதந்திர தின உரையை ஆற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசிய உரையின் முழுத் தொகுப்பையும் படிக்க
நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள், மற்றும் கனவுகள் பற்றியுமானதாக அமைந்தது இன்று நரேந்திர மோடி ஆற்றிய உரை. 78 நிமிடங்கள் உரையாற்றிய நரேந்திர மோடி மகாக்கவி பாரதியாரின் கவிதையை தமிழில் வாசித்தார். நீலகிரி மலையில் மலர்ந்திருக்கும் குறிஞ்சிப் பூக்கள் பற்றியும் அவரது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
72 independence day of india 2018, PM Narendra Modi Speech நரேந்திர மோடி உரை - 10 முக்கிய அம்சங்கள்
- பாஜக ஆட்சியில் இந்திய அடைந்துள்ள மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டார் நரேந்திர மோடி. இந்தியா பொருளாதார அளவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. சர்வதேச வலிமை வாய்ந்த பொருளாதார நாடுகள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மூலமாக இளைஞர்களின் செயல்பாடு மேம்பட்டு வருவதாகவும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் புதிய தொழில்கள் தொடங்க அரசு கடன்கள் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
- விண்வெளித்துறையில் இந்தியா மகத்தான சாதனைகளை 2022க்குள் புரியும் என்றார். விண்வெளிக்கு மனிதர்களை நான்காவது நாடாக இந்தியா விளங்கும் என்று குறிப்பிட்டார்.
- பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் பெண்களிற்கான கமிசன் அமைக்கப்படும் என்று பேசிய அவர், ராணுவம், கப்பல்படை, விமானப்படைகளில் பணியாற்றும் பெண்களுக்கு தற்காலிக கமிசன் மட்டுமே இதுவரை இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க ஃபாஸ்ட் ட்ராக் கோர்ட்டுகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
- தேசிய சுகாதர திட்டம் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய நரேந்திரமோடி, செப்டம்பர் 25ம் தேதி அத்திட்டத்தினை மக்களுக்காக செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய அபியான் என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி மக்கள் நல உதவி பெறுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- வரியை சரியான நேரத்தில் அரசாங்கத்தை ஏமாற்றாமல் கட்டும் குடிமக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதனால் தான் இந்தியாவில் பல்வேறு திட்டங்களை தங்கு தடையின்றி சிறப்பாக செய்து முடிக்க இயலும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நரேந்திர மோடி.
- ஓபிசி, எஸ்.சி-எஸ்.டி கமிஷன்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கொடுத்து, தலித்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் மேம்பாட்டுக்கு தனது அரசு பணியாற்றி வருவதாக மோடி குறிப்பிட்டார்.
- ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் நாடு தூய்மை அடைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், உலக அரங்கில் இத்திட்டத்திற்கு அதிக பாராட்டுகள் குவிந்து வருகிறது என்றார்.
- ஜம்மு காஷ்மீர் மக்கள் பற்றி அவர் பேசுகையில் காஷ்மீர் மக்களை அன்பால் அரவணைத்து பாதுகாப்போம் அன்றி குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் வன்முறையால் அணுகமாட்டோம் என்றார்.