விவசாயிகளுக்கு ரூ2000 மத்திய அரசு நிதி: அடுத்த தவணை ரெடி

PM Kisan Registration @pmkisan.gov.in: நிதியுதவியின் அடுத்த தவணை எப்போது வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PM Kisan Tamil News, PM Kisan Registration @pmkisan.gov.in: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) யோஜனா (திட்டம்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி ஒரு ஆண்டில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ருபாய் என 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான  நிதித்தொகை வரும் டிசம்பர் 25-ந் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தின் ரைசனில் நடைபெற்ற ‘கிசான் கல்யாண்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தெரிவித்தார்.  இது குறித்து பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த ஆண்டு விழாவில் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் ஆலோசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Kisan Registration @pmkisan.gov.in: பி.எம் கிசான் ஸ்கீம்

மேலும்  அதே நாளில் கோடி விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியின் மற்றொரு தவணை கிடைக்கும் என்றும் கூறினார்.  மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று ஹெக்டேர் வரை சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, மூன்று சம தவணைகளில் 6,000  நிதி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியான விவசாய குடும்பங்களை மாநில அரசு மற்றும் யூடி நிர்வாகம் தேர்வு செய்து அவர்களின் வங்கி கணக்கில் இந்நிதியுதவி நேரடியாக செலுத்தப்படுகிறது.

PM Kisan திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் யார்?

தங்கள் பெயர்களில் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களை வைத்திருக்கும் அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களும்,  இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள்

PM Kisan திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியற்றவர்கள் யார்?

நில உரிமையாளர்கள் விவசாயிகள் குடும்பங்களில், அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள், பணி அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் மத்திய / மாநில அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் , பட்டய கணக்காளர்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகளில் பதிவுசெய்து தொழில் செய்து வருபவர்களுக்கு இத்திட்டம் மூலம் பயன்பெற தகுதியற்றவர்களாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm kisan tamil news pm kisan registration pmkisan gov in update

Next Story
கட்சித் தாவிய மனைவிக்கு பாஜக எம். பி விவாகரத்து நோட்டிஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com