Advertisment

இஸ்ரேல் ஜனாதிபதி உடன் மோடி சந்திப்பு; மக்களுக்குத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்க வலியுறுத்தல்

அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, சில பணயக் கைதிகளை ஹமாஸ் சமீபத்தில் விடுவித்ததற்கு வரவேற்பு தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
 Modi with Israel Isaac Herzog.jpg

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நேற்று (டிச.1) இஸ்ரேல் ஜனாதிபதி  ஐசக் ஹெர்சாக்-ஐ பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சந்தித்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisment

துபாயில் சி.ஓ.பி 28 காலநிலைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள துபாய் சென்ற மோடி ஹெர்சாக்கைச் சந்தித்துப் பேசினார். தற்போதைய போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, சில பணயக் கைதிகளை ஹமாஸ் சமீபத்தில் விடுவித்ததற்கு வரவேற்பு தெரிவித்தார். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான மோடியின் இருதரப்பு சந்திப்பிலும் இஸ்ரேல்-ஹமாஸ்  மோதல் பற்றிய விவாதங்கள் முக்கிய இடம் பெற்றன. 

“இரு நாட்டு தலைவர்களும் தங்களின் பரந்த மற்றும் துடிப்பான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்” என்று வெளியுறவுத் துறை  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கும் வைபிரண்ட் குஜராத் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

மோடி, ஹெர்சாக் உள்பட 40க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்கள் வருடாந்திர காலநிலை மாற்ற மாநாட்டின் உயர்மட்டப் பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் கூட்டத்தில்  கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் இறுதி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் பிரதிநிதி கலந்து கொண்டுள்ளார். 

இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரம், மோடி நடத்திய விவாதங்கள் உட்பட தலைவர்களுக்கிடையேயான இருதரப்பு விவாதங்களில் முக்கிய இடம்பிடித்ததாக அறியப்படுகிறது. 

ஹெர்சாக் உடனான தனது சந்திப்பில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து பாதுகாப்பாக வழங்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இரு நாடுகளின் தீர்வுக்கான இந்தியாவின் ஆதரவையும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு முன்கூட்டியே மற்றும் நீடித்த தீர்வையும் அவர் வலியுறுத்தினார்,” என்று MEA அறிக்கை கூறியது.

தொடர்ந்து ஜனாதிபதி ஹெர்சாக், இந்தியாவின் ஜி20 மாநாடு வெற்றிக்கு மோடியை வாழ்த்தினார். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை தொடங்குவதை வரவேற்றார். இது செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்றாகும்.

இஸ்ரேல் ஜனாதிபதி மட்டுமல்லாமல் மற்ற உலகத் தலைவர்கள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து மாலையில், பிரெஞ்சு பிரதமர் இம்மானுவேல் மக்ரோன்,  மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் அலைன் பெர்செட் ஆகியோருடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். பின்னர் இரவு மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடனான அவரது சந்திப்பில், குளோபல் சவுத் நாடுகளின் விவகாரங்கள் மற்றும் கவலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா ஜி20 தலைவர் பதவியில் இருந்தபோது குட்டெரெஸ் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியா எடுத்து வரும் காலநிலை நடவடிக்கைகள் குறித்து அவருக்குத் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க:  https://indianexpress.com/article/india/pm-meets-israeli-president-flags-need-for-safe-delivery-of-aid-9050659/

"காலநிலை நடவடிக்கை, காலநிலை நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஐநா உட்பட பலதரப்பு ஆளுகை மற்றும் நிதி நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “நிலையான வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, MDB சீர்திருத்தங்கள் மற்றும் ஜி20 பிரசிடென்சியின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இந்தியாவின் முயற்சிகளை ஐநா பொதுச்செயலாளர் பாராட்டினார். பிரதமரின் பசுமைக் கடன் முயற்சியை அவர் வரவேற்றார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐநா உச்சி மாநாட்டில்,  இந்தியாவின் பிரசிடென்சி  சாதனைகளை கட்டியெழுப்பவும், அவற்றை முன்னோக்கி கொண்டு செல்லவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாக குட்டெரஸ் உறுதியளித்தார். 

 

India Israel Palestine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment