Advertisment

PM Modi 68 Birthday: பிறந்த நாள் அன்று வாரணாசி செல்லும் மோடி.. காரணம் வெளியானது!

PM Narendra Modi to celebrate his Birthday in Varanasi : பிரதமர் பதவியில் இருந்தவாறே அவர் கொண்டாடும் 5வது பிறந்தாள் இதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi 68 Birthday

PM Modi 68 Birthday

PM Modi 68 Birthday : பிரதமர் நரேந்திர மோடி இன்று (17.9.18)  தனது  68 வயது பிறந்தநாளை வாரணாசியில் பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார்.

PM Modi 68 Birthday : பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  அவருக்கு அரசியல் தலைவர்கள்,  கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளன்று புதிய திட்டங்களைமோடி தொடங்கி வைப்பது வழக்கம். கடந்தாண்டில் குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து நாட்டுக்காக அர்பணித்தார். அந்த வகையில் பிரதமர் பதவியில் இருந்தவாறே அவர் கொண்டாடும் 5வது பிறந்தாள் இதுவாகும்.

PM Modi 68 Birthday

இன்று தனது 68 வது பிறந்தாளில் 2 நாள் பயணமாக அவர் உத்தர பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். வாரணாசி செல்லும் அவர், பாரா லால்பூர் பகுதியில் 5 ஆயிரம் பள்ளி  குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

அதை தொடர்ந்து நாளை 18ம் தேதி, வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல நிறைவடைந்த சில நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment