பிரதமர் மோடி இன்று (ஜுன் 2) ஞாயிற்றுக்கிழமை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று 7 கூட்டங்களை நடத்துகிறார். கருத்துக் கணிப்பில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில் அடுத்த 100 நாட்களுக்கான திட்டம், ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்கிறார்.
அரசாங்க வட்டாரங்கள் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களில் ரீமால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். அடுத்து நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வார் என்று கூறினார்.
கன்னியாகுமரியில் 3 நாள் தியானம், கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆகியவற்றிக்குப் பின் மோடி இந்த கூட்டங்களை நடத்துகிறார். மேலும், ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மோடி ஆலோசனை செய்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/pm-modi-meetings-review-agenda-exit-polls-9366995/
இதையடுத்து புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாள் திட்டங்கள் குறித்து ஒரு நீண்ட கூட்டத்தை மோடி நடத்துகிறார் என்று தகவல்கள் கூறப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெறும். மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று நேற்று வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறின. பா.ஜ.க 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“