பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படை விமானி அபி நந்தன் வர்த்தமான் நாளை (மார்ச்.1) இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கும் நிலையில், 'இது வெறும் பயிற்சி மட்டுமே, இனிமேல் தான் உண்மை சம்பவத்தை செய்யப் போகிறோம்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, புது டெல்லியின் விக்யான் பவனில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சாந்தி ஸ்வார்அப் பாத்நகர் பரிசு வழங்கும் நிகழ்வி ல் பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆய்வகத்தில் செலவழிக்கிறீர்கள். முதலில் 'பைலட் ப்ராஜெக்ட்'-ஐ செய்ய வேண்டும். அளவிடுதல் அதன்பிறகே நடத்தப்படும். இப்போது தான் ஒரு பைலட் ப்ராஜெக்ட் முடிக்கப்பட்டுள்ளது. இனி, உண்மையான ப்ராஜெக்ட்டை நாம் துவங்க வேண்டும். இதற்கு முன் நடந்தது வெறும் பயிற்சி தான்" என்று தெரிவித்திருக்கிறார்.
February 2019
அபி நந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுவிப்பதாக அறிவித்த பிறகு, பிரதமர் மோடி 'பைலட் ப்ராஜெக்ட்' என பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.