Advertisment

PM Narendra Modi Address to Nation: 'புதிய பாரதம், புதிய ஜம்மு & காஷ்மீர், புதிய லடாக்' - பிரதமர் மோடி

PM Narendra Modi Speech Today Updates: இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ள ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi Today Live, PM Modi Address Nation: பிரதமர் மோடி உரை

PM Modi Today Live, PM Modi Address Nation: பிரதமர் மோடி உரை

PM Modi Address to Nation Updates: பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினர்.

Advertisment

370 சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்றைய உரையில் விளக்கம் அளித்தார்.

அதே வேளையில், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ள ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தம அவர் பல அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.

Live Blog

PM Narendra Modi Updates: ஜம்மு காஷ்மீர் இரண்டாம் பிரிக்கப்பட உள்ளது குறித்தும், அதன் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.














Highlights

    20:45 (IST)08 Aug 2019

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதே - பிரதமர் மோடி

    "காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதே; மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம். மாற்றுக் கருத்தை மதிக்கிறோம்; ஆனால் தேச விரோத செயல்களை ஆதரிக்க முடியாது" என்றார். நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையை தொடங்கிய பிரதமர் மோடி மொத்தமாக 39 நிமிடங்கள் உரையாற்றினார்.

    20:43 (IST)08 Aug 2019

    காஷ்மீர் சால்வை, மூலிகை இனி உலகம் அறியும் - மோடி

    ஜம்மு காஷ்மீரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ சென்டர்கள் உருவாகும். காஷ்மீர் சால்வை, மூலிகை மருந்து போன்றவற்றை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும். அந்த மூலிகைகளின் பயன்களை உலகமே அனுபவிக்கச் செய்வோம் - பிரதமர் மோடி

    20:41 (IST)08 Aug 2019

    தமிழ் சினிமா உலகம் காஷ்மீருக்கு வர வேண்டும் - பிரதமர் மோடி

    "தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 1947க்கு பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன, ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும். காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீசாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து தரப்படும். ஜம்மு காஷ்மீரில் சாதாரண நிலை திரும்புவதால் சினிமா படப்பிடிப்புகள் கூட நடத்தலாம். இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகினரை படப்பிடிப்புக்கு அழைக்கிறேன். பிரிவினைவாதிகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரிப்பார்கள் என நம்புகிறேன். கடந்த 3 மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தான் மின்சாரம் வழங்கப்பட்டது. இனி 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேலும் பல திட்டங்கள் அமலாகும்" - பிரதமர் மோடி

    20:28 (IST)08 Aug 2019

    PM Modi address - ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்

    ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும் - பிரதமர் மோடி

    20:25 (IST)08 Aug 2019

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி!

    370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும் - பிரதமர் மோடி

    20:23 (IST)08 Aug 2019

    PM Modi address: காஷ்மீரில் காகித அளவில் சட்டங்கள்

    மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தர வேண்டும். ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன - பிரதமர் மோடி

    20:15 (IST)08 Aug 2019

    PM Narendra Modi address to Nation - சர்தார் படேல், வாஜ்பாய் கனவு நிறைவேறியது

    370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது. 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைக்கள் நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி

    20:13 (IST)08 Aug 2019

    PM Narendra Modi address: 370, 35ஏ இருந்ததால் காஷ்மீரில் தீவிரவாதம்

    370, 35ஏ இருந்ததால் காஷ்மீரில் தீவிரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

    20:12 (IST)08 Aug 2019

    PM Modi address: காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை

    காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் துயரை பாஜக அரசு துடைத்துள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது - பிரதமர் மோடி

    20:09 (IST)08 Aug 2019

    PM Modi address to Nation: வரலாற்று சிறப்பு மிக்க முடிவு

    பிரதமர் மோடி, 'காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு' என்றார். 

    PM Narendra Modi address : உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 125 எம்.பி.க்களின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் மாநிலம் இப்போது ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.

    சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும். லடாக்கை துணை நிலை ஆளுநர் ஆட்சி செய்வார்.

    லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் கார்கில் பகுதிக இணைகின்றன. தவிர, ஜம்மு காஷ்மீரின் இதர சில பகுதிகள் லடாக்கில் இணைகின்றன. இவற்றைத் தவிர மீதமுள்ள பகுதிகள் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு & காஷ்மீரிலேயே தொடரும்.

    ஜம்மு காஷ்மீரின் ஆறு மக்களவை தொகுதிகளில், ஐந்து ஜம்மு காஷ்மீரிலேயே தொடரும். ஒன்று மட்டும் லடாக்கில் இடம்பெறும். தேர்தல் ஆணையம், இவ்விரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் ஒருசேர தேர்தல் நடத்த முடியும்.

    Narendra Modi Jammu And Kashmir
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment