Pm Modi Speech | Uttar Pradesh | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடந்து வரும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 4 ஆம் தேதிகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5வது கட்ட தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான வாக்குப் பதிவு 7 கட்ட தேர்தலில் நடைபெற உள்ளது.
மோடி பேச்சு
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் 5-வது கட்ட வாக்குப்பதிவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, புல்டோசரை எப்படி இயக்குவது என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சமாஜவாதியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள், குழந்தை ராமர் மீண்டும் கூடாரத்திற்கே செலவார், புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது என்று யோகி-யிடம் அவர்கள் டியூஷன் எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“