ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், கல்வீச்சு, பிரிவினைவாதம், எல்லையில் துப்பாக்கிச்சூடு போன்ற பிரச்னைகள் இல்லாத பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் என்று உதம்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: In apparent jibe at Rahul-Lalu mutton and Tejashwi fish videos, Modi says opposition leaders ‘tease people… like Mughals’
ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்து திரும்ப கொடுக்கப்படும் என்றும், அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வளர்ச்சி போர்க்குணத்தை மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - ஜம்மு காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 2019-ல் இழந்தது மற்றும் அக்டோபரில் அதன் மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்காக எனக்கு மிகப் பெரிய கனவு இருக்கிறது. நாங்கள் மாநில அந்தஸ்தை திரும்ப கொடுப்போம்” என்று கூறினார்.
பாஜகவின் மக்களவை வேட்பாளர் டாக்டர் ஜிதேந்திர சிங் (உதம்பூர்), ஜுகல் கிஷோர் ஷர்மா (ஜம்மு) ஆகியோருக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
“ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் சொந்த எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரைப் பார்க்க வருவார்கள்” என்று மோடி கூறினார்.
யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை ‘ஒரு டிரெய்லர்’ என்று விவரித்த அவர், ஜம்மு காஷ்மீர் பற்றிய புதிய மற்றும் அழகான படத்தை உருவாக்கும் பணியில் நான் இறங்க வேண்டும்” என்றார்.
வளர்ச்சிப் பணிகள் நிலைமையை முற்றிலுமாக மாற்றி, மக்களிடையே அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
“நமது துணிச்சலான வீரர்களின் தாய்மார்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் பள்ளத்தாக்கில் கல் வீச்சு சம்பவங்கள் இனி நடக்காது” என்று அவர் கூறினார். “காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தாய்மார்கள், தங்கள் மகன்கள் 3-4 நாட்களாக வீடு திரும்பாதபோது தவறான கைகளில் விழுந்துவிட்டார்கள் என்று கவலைப்பட்டவர்கள், இன்று என்னை நிறைய ஆசீர்வதிப்பார்கள், ஏனென்றால் அவர்கள் இப்போது வீட்டில் நன்றாக தூங்கலாம்.” என்று மோடி கூறினார்.
பள்ளிகள் இப்போது எரிக்கப்படவில்லை, ஆனால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, எய்ம்ஸ், ஐஐடிகள், ஐஐஎம்கள், நவீன சுரங்கப்பாதைகள், அகலமான சாலைகள் மற்றும் வசதியான ரயில் பயணங்கள் ஆகியவை ஜம்மு காஷ்மீரை மாற்றியுள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் யூனியன் பிரதேசத்திற்கு வருகை தருகின்றனர்.
நமது நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் அதிக எண்ணிக்கையில் ஜம்மு காஷ்மீருக்கு வரும். மேலும், சுற்றுலாவுடன், அதன் ஸ்டார்ட்-அப்களுக்கும் ஜம்மு காஷ்மீர் பெயர் பெறும்.
“கடந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்ததோ அது ஒரு டிரெய்லர் மட்டுமே. நான் ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பி.டி.பி கட்சிகளை தாக்கினார். இந்த கட்சிகள், வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தை எதிர்க்கும் குடும்பங்களால் நடத்தப்படுகின்றன என்றார்.
அதிகாரத்திற்காக, அவர்கள் ஜம்மு காஷ்மீர் மக்களை வெளியே பார்க்க அனுமதிக்காமல், ஜம்மு காஷ்மீரை வெளியில் பார்க்க விடாமல், ‘பிரிவு 370’ என்ற சுவரை எழுப்பினர். உங்கள் ஆசியுடன் மோடி அந்தச் சுவரை இடித்தது மட்டுமின்றி, அதன் இடிபாடுகளையும் புதைத்துவிட்டேன்.
370 வது பிரிவை மீண்டும் அறிவிக்க எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு, குறிப்பாக காங்கிரசுகு அவர் சவால் விடுத்தார். “அவர்கள் 370 வது பிரிவை மீண்டும் கொண்டுவருவதாக அவர்கள் அறிவிக்கட்டும், மக்கள் அவர்கள் முகத்தை கூட பார்க்க மாட்டார்கள்” என்று நரேந்திர மோடி கூறினார்.
“அவர்கள் பொய்யைப் பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டால், ஜம்மு-காஷ்மீர் சுடுகாடாகிவிடும், அது பிரிந்துவிடும் என்று அவர்கள் கூறுவது வழக்கம். ஆனால், ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் அவர்களுக்கு யதார்த்தத்தைக் காட்டியுள்ளனர்” என்று மோடி கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழாவை புறக்கணித்ததற்காக காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை விமர்சித்த மோடி, “புனித மாதமான சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைக்கப்படுவதை” வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல் செய்ய பரப்பியதற்காக அவர்களைத் தாக்கினார். மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதோடு, இவர்கள் யாரை சமாதானப்படுத்த முயற்சித்தார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.
ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோவை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, “நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்வதற்காக அதை வீடியோ எடுக்கிறார்கள்.” என்று நரேந்திர மோடி கடுமையாகத் தாக்கினார்.
சைவம் அல்லது அசைவ உணவுகளை உண்பது தனி மனிதனின் உரிமை என்றார். “சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை, மோடியும் யாரையும் தடுக்க மாட்டார். ஆனால், இவர்களின் (எதிர்க்கட்சித் தலைவர்களின்) எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோவில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. முகலாயர்களைப் போலவே, சாவான் மாதத்தில் வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய விரும்புகிறார்கள்” என்று மோடி கூறினார்.
“நீங்கள் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறீர்கள். இந்த கருத்துக்களுக்குப் பிறகு, அவர்கள் என்னைப் பின்தொடர்வார்கள் என்பதை நான் அறிவேன். ஒரு சரமாரியான வசை இருக்கும். ஆனால், எல்லை மீறும் போது, மக்கள் முன் உண்மையைப் பேசுவது எனது கடமை” என்று நரேந்திர மோடி பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“