Advertisment

மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கிய மன்னர்

குவைத் பயணம் செய்துள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது’ அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவால் வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Modi Kuwait 1

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவால் வழங்கப்பட்டது. (PTI Photo)

PM Modi Kuwait Visit, PM Modi receives Mubarak Al Kabeer:  ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ என்பது குவைத் நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இறையாண்மை மிக்க தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படும் குவைத் உயரிய விருது ஆகும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: PM Modi awarded Kuwait’s highest honour, the Order of Mubarak Al Kabeer

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். மோடிக்கு வழங்கப்படும் 20-வது சர்வதேச கவுரவம் இது.

குவைத் நாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி தனது 2 நாள் குவைத் பயணமாக, இந்திய தொழிலாளர் முகாமுக்கு சனிக்கிழமை வருகை தந்தார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவால் அழைக்கப்பட்ட பிரதமர் மோடி, மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் சபா அல்-கலித் அல்-சபா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

Advertisment
Advertisement

குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது, இதற்கு முன்னர், பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
PM Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment