scorecardresearch

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; குடும்பத்தினருக்கு லேசான காயம்

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; சம்பவம் நடந்தபோது பிரஹலாத் மோடி தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திபுராவுக்கு எஸ்.யூ.வி.,யில் சென்று கொண்டிருந்தார்.

பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; குடும்பத்தினருக்கு லேசான காயம்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே விபத்துக்குள்ளானதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

மைசூரில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ள கட்கோலா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரஹலாத் மோடி தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திபுராவுக்கு எஸ்.யூ.வி.,யில் சென்று கொண்டிருந்தபோது டிவைடரில் மோதியது.

இதையும் படியுங்கள்: நாசிவழி தடுப்பூசி இன்கோவேக் அறிமுகம்.. அரசின் கொள்முதல் விலை 325, தனியாருக்கு ரூ.800 நிர்ணயம்

பின்னர், ஓட்டுநர் உட்பட அனைவரும் மைசூரில் உள்ள ஜே.எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிரஹலாத் மோடியின் பேரனின் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

ட்விட்டரில் பரவும் காட்சிகள் காரின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டதையும், புல்டோசர் மூலம் வாகனம் நகர்த்தப்பட்டதையும் காட்டுகிறது.

இதனிடையே, விபத்து நடந்த இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm modi brother prahlad family members injured in car accident in mysuru