/indian-express-tamil/media/media_files/vo51wYltyHWZ8cuX8nbM.jpg)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Bjp | Lok Sabha Election:நாளுமன்ற மக்களவை தேர்தல்கள் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறன்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க-வின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று வியாழக்கிழமை இரவு டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத்தின் பூபேந்திர படேல், மத்தியப் பிரதேசத்தின் மோகன் யாதவ், சத்தீஸ்கரின் விஷ்ணு தியோ சாய், உத்தரகாண்டின் புஷ்கர் சிங் தாமி, கோவாவின் பிரமோத் சாவந்த், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி உள்ளிட்ட பல்வேறு மாநிலத் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 10:30 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இக்கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. 'சுமார் 160 பெயர்களை உள்ளடக்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், இந்த வாரம் முன்னதாகவோ அல்லது வார இறுதியிலோ அறிவிக்கப்படும்' என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
2019-ல் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு, பா.ஜ.க தனது வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள இலக்கு வைத்துள்ள பெரிய எண்ணிக்கையிலான தொகுதிகளின் வேட்பாளர்கள் ஆரம்பப் பட்டியலில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. பா.ஜ.க மாநில பிரிவுகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களின் பரிந்துரைகளை மத்திய தலைமைக்கு அனுப்பத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், உ.பி., கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களில் 10 இடங்களை வென்று, எதிர்க்கட்சிகளை பா.ஜ.க அதிர்ச்சிக்குள்ளாக்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு வந்துள்ளது. காங்கிரஸ் 3 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியது. இதனால், மேல்சபையில் பெரும்பான்மையை தொடும் தூரத்தில் பா.ஜ.க முன்னேறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Modi chairs midnight meet to finalise BJP’s first list of Lok Sabha candidates
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.