செப்டம்பர் 14, 2018 அன்று, கடினமான பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசாங்கத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான கணிசமான அழுத்தங்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் நிலையை மதிப்பாய்வு செய்ய கூட்டப்பட்ட கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நிதானம் இழந்து அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை "பணக் குவியல் மேல் அமர்ந்திருக்கும் பாம்புடன்" ஒப்பிட்டதாக, முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க், ’நாங்களும் கொள்கையை உருவாக்குகிறோம்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi compared Urjit Patel to ‘snake who sits on hoard of money’: Ex-Finance Secy
ஹார்பர்காலின்ஸால் உருவாக்கிய இந்த புத்தகம் அக்டோபரில் வெளியிடப்பட உள்ளது. உர்ஜித் படேல் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா உட்பட மற்ற அரசு அதிகாரிகளுடன் விளக்கங்கள் மற்றும் கலந்துரையாடல்களை சுமார் இரண்டு மணி நேரம் கேட்டபின்னும், “எந்த தீர்வும் வெளிவராததை” கண்டு பிரதமர் அதிருப்தி அடைந்தார் என்று சுபாஷ் சந்திர கார்க் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கூடுதல் முதன்மைச் செயலர் பி.கே. மிஸ்ரா, அப்போதைய டி.எஃப்.எஸ் செயலர் ராஜீவ் குமார், சுபாஷ் சந்திர கார்க் மற்றும் ரிசர்வ் வங்கியின் இரண்டு துணை ஆளுநர்களான விரால் ஆச்சார்யா மற்றும் என்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
"அவர் (உர்ஜித் படேல்) சில பரிந்துரைகளை வழங்கினார், அதாவது அனைத்து முடிவுகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி செய்ய எதுவும் இல்லை, அது ஏற்கனவே செய்து கொண்டிருப்பதைத் தவிர என்று உர்ஜித் படேல் கூறினார்," என முன்னாள் நிதிச் செயலாளர் கூறினார். "அவரது மதிப்பீடு ரிசர்வ் வங்கி தீர்வு அளிக்கும் இடத்தில் இல்லை என்று தோன்றியது,” மற்றும் பொருளாதார நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்துடனான அதன் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும் அர்த்தமுள்ள எதையும் செய்யத் தயாராக இல்லை, என்று சுபாஷ் சந்திர கார்க் கூறினார்.
“அந்த கட்டத்தில், பிரதமர் தனது நிதானத்தை இழந்து உர்ஜித் படேலை விமர்சித்தார். அப்படி ஒரு கோபமான மனநிலையில் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். ரிசர்வ் வங்கியின் திரட்டப்பட்ட கையிருப்பை எந்தப் பயனுக்கும் பயன்படுத்தாததற்காக உர்ஜித் படேலை, பண குவியலுக்கு மேல் அமர்ந்திருக்கும் பாம்புடன் மோடி ஒப்பிட்டார்,” என்று சுபாஷ் சந்திர கார்க் எழுதிய ‘கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா’ என்ற அத்தியாயத்தில், உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதற்கு முந்தைய சூழ்நிலைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
"அவர் சில தீவிரமான கடினமான பேச்சுகளை முன்வைத்தார். ரிசர்வ் வங்கியின் அலட்சியம் இந்தியாவை பாதித்த பல விஷயங்களை அவர் எடுத்துரைத்தார். தக்கவைக்கப்பட்ட உபரியின் விஷயத்தையும் அவர் எடுத்துரைத்தார்… அவர் உர்ஜித் படேலுக்கு ஒரு பிரதமராக, வழிகாட்டுதல்களை வழங்காமல், வாரியக் கூட்டத்தைக் கூட்டி, அருண் ஜெட்லி மற்றும் நிதிக் குழுவுடன் கலந்தாலோசித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்,” என்று சுபாஷ் சந்திர கார்க் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்று ரிசர்வ் வங்கியின் உபரி பரிமாற்றம் ஆகும். "ஆகஸ்ட் 10, 2017 அன்று RBI இன் வாரியக் கூட்டத்தில், RBI வாரிய உறுப்பினராக நான் கலந்து கொண்ட முதல் கூட்டத்தில், 2016-17 நிதியாண்டில் RBI உபரியான 44,200 கோடி ரூபாயில் 13,400 கோடி ரூபாயைத் தக்கவைக்க முன்மொழியப்பட்டது" என்று சுபாஷ் சந்திர கார்க் எழுதினார். 2016–17ம் ஆண்டுக்கான உபரி தொகையாக சுமார் 30,000 கோடி ரூபாய் அரசுக்கு மாற்றப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. முந்தைய ஆண்டுகளைப் போலவே உபரியில் 100 சதவீதத்தை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றுமாறு உர்ஜித் படேலிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக சுபாஷ் சந்திர கார்க் கூறினார்.
பிப்ரவரி 12, 2018 அன்று உர்ஜித் படேல் மீது அரசாங்கத்தின் விரக்தி தொடங்கியது, வங்கித் துறையின் செயல்படாத கடன்களைக் கையாள்வதற்காகவும், ஐ.பி.சி (திவால் நிலை மற்றும் திவால் நிலைக் குறியீடு) யின் கீழ் இந்த கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களைக் கையாள்வதற்காகவும் அவர் மிகவும் இறுக்கமான சூத்திரத்தை உருவாக்கினார், என்று சுபாஷ் சந்திர கார்க் எழுதினார். அரசாங்கத்துடனான கொள்கை வேறுபாடுகளால், உர்ஜித் படேல் இறுதியில் டிசம்பர் 10, 2018 அன்று RBI கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.
சுபாஷ் சந்திர கார்க்கின் கூற்றுப்படி, செப்டம்பர் 14 அன்று பிரதமரால் கூட்டப்பட்ட கூட்டத்தில், உர்ஜித் படேல் ஒரு விளக்கக்காட்சியை அளித்தார், அங்கு அவரது தீர்வு நடைமுறையில் உள்ள பொருளாதார நிலைமையை விட மிகவும் ஆபத்தானதாக இருந்தது, மேலும் ஒரு பயங்கரமான கருத்தை முன்வைத்தார். உர்ஜித் படேல் வழங்கிய சில பரிந்துரைகள், நீண்ட கால மூலதன ஆதாய (எல்.டி.சி.ஜி) வரியை ரத்து செய்தல், முதலீட்டு இலக்குகளை பெருமளவில் அதிகரிப்பது, பலதரப்பு நிறுவனங்களை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வற்புறுத்தி, அதைச் செலுத்த முன்மொழிந்தார் மற்றும் MSMEகள் உட்பட பல நிறுவனங்களின் நிலுவையில் உள்ள பில்களை அரசாங்கம் செலுத்த முன்மொழிந்தார், இது அவரது கணக்கின்படி, ஆயிரக்கணக்கான கோடிகள் ஆகும்.
ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 12 சுற்றறிக்கை, பொதுவாக செயல்படாத கடன்களைத் தீர்ப்பதற்கான ஒரு நல்ல நடவடிக்கை, மின்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் தொடர்பாக வங்கிகளுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியது. மின்துறை டெவலப்பர்களின் மனுவின் பேரில், அலகாபாத் உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7 ஐ செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டது, இது கவர்னருடன் கலந்தாலோசித்த பிறகு, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அரசு 'வழிகாட்டுதல்' வழங்க வழிவகை செய்தது.
“இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி கலந்து கொள்ளவில்லை” என்று சுபாஷ் சந்திர கார்க் கூறினார்.
மார்ச் 14, 2018 அன்று, காந்திநகரில் உள்ள குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் பொருளாதார மையத்தில் ஆற்றிய கடுமையான உரையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மீதான ஒழுங்குமுறை அதிகாரத்தை அகற்றுவதில் அரசாங்கத்தின் இயலாமை குறித்து படேல் கேள்வி எழுப்பினார், ஏனெனில் தனியார் துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது பொதுத்துறை வங்கிகள் (PSB) மீது ரிசர்வ் வங்கிக்கு போதுமான ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை. ஜூன் 2018 இல், குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு பணவீக்க அழுத்தங்களின் சாத்தியமான உயர்வு காரணமாக, உர்ஜித் படேல் ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாக உயர்த்தினார். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2018 இல் மற்றொரு 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டது.
ரிசர்வ் வங்கி, எட்டு பொதுத்துறை வங்கிகளை பி.சி.ஏ கட்டமைப்பின் கீழ் வைத்துள்ளது, இதனால் கடன் கொடுக்க முடியாமல் போனது, மேலும், வங்கிகளில் லட்சக்கணக்கான கோடிகளுக்கு கூடுதல் மூலதனத்தை வைக்க அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்ததாக சுபாஷ் சந்திர கார்க் எழுதினார். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், இந்த திட்டத்தின் முன்மொழிவுக்கு முதலில் ஒப்புக்கொண்ட உர்ஜித் படேல், RBI தவிர வேறு யாரேனும்/வங்கி மூலம் பத்திரங்களை வழங்குவது குறித்து கேள்வி எழுப்பி நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். பத்திரங்கள் நேரடி முறையில் அல்லாமல் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார், என்று சுபாஷ் சந்திர கார்க் கூறினார்.
இது சுபாஷ் சந்திர கார்க்கின் இரண்டாவது புத்தகம். அவரது முந்தைய புத்தகத்தின் தலைப்பு ‘தி $10 டிரில்லியன் ட்ரீம்’.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.